Kailasanathar: திடீரென்று புகுந்த பன்றி.. அம்பினால் தாக்கி கண்ணீர் விட்ட மன்னர்.. சுயரூபம் எடுத்த சிவபெருமான்
Kailasanathar: வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் எத்தனையோ நம் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.
Kailasanathar: உலகம் முழுவதும் கோயில் கொண்டு நிறைந்து இருக்கக்கூடிய இறைவனாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். இவருக்கு பக்தர்கள் இல்லாத இடமே கிடையாது. கடவுளுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு திரும்பும் திசை எல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உயிரினங்கள் தோன்றும் முன்னரே இந்த பூமியில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக காட்சி கொடுத்து தெய்வமாக விளங்கி வந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. மன்னர்கள் மக்கள்கள் கோயில்கள் அமைத்து சிவபெருமானை வழிபட்டு வந்தாலும். அதற்கு முன்னதாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டு வந்ததாக புராணங்களில் கூறப்படுகின்றன.
அனைத்து உயிரினங்களுக்குமான கடவுளாக சிவபெருமான் திகழ்ந்த வருகின்றார். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் சிவபெருமானையே நம்பி குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். போட்டி போட்டுக் கொண்டு தங்களது கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காகவும் கோயில்களை மிகப் பிரமாண்டமாக கட்டி வைத்து சென்றுள்ளனர்.
பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அந்த கோயில்கள் கம்பீரமாக இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் நின்று வருகின்றன. எத்தனையோ கோயில்கள் இன்று வரை யாரால் கட்டப்பட்டது என்பது கூட தெரிய வில்லை.
அதுபோல வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் எத்தனையோ நம் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் கைலாசநாதர் தினமும் தாயார் அரம்பலர்ந்த நாயகி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்படுகின்றனர். உற்சவர் ஆக சோமாஸ்கந்தர் விளங்கிர. வருகிறார். கோயிலின் தீர்த்தமாக சிவகங்கை தீர்த்தமும் தல விருச்சமாக வில்வம் மரமும் விளங்கி வருகிறது.
இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சுயம்புலிங்கமாக அருள் பாலித்து வருகிறார் அவருடைய திருமேனியில் அம்பு எய்து பட்ட தழும்பு இருக்குமாம் இந்த திருக்கோயில் மேற்கு நோக்கிய தலமாக திகழ்ந்து வருகிறது.
இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய விநாயகர் சகட விநாயகர் என்று திருநாமத்தோடு அருள் பாலித்து வருகிறார். அனைத்து கலைகளிலும் சிறப்பு மிகுந்த நாயகனாக விளங்கக்கூடிய சிவபெருமானை வணங்கினால் முன்னேற்றம் கிடைக்கும் இருப்பினும் இந்த கைலாசநாதர் வணங்கினால் கலையுலகில் முன்னேற்றம் பெறலாம் என பக்தர்கள் நம்புகின்றனர்.
தல வரலாறு
கொல்லிமலை பகுதியை தலைநகரமாகக் கொண்டு வல்வில் ஓரி என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். வில் வித்தையில் இந்த மன்னன் மிகப்பெரிய வீரனாக திகழ்ந்து வந்தார். அதேசமயம் மிகப்பெரிய சிவபெருமானின் பக்தனாகத் திகழ்ந்து வந்துள்ளார். ஒருமுறை இவர் வேட்டைக்காக காட்டுக்குச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாக இவருக்கு வேட்டைக்கான மிருகங்கள் எதுவும் சிக்கவில்லை. அதற்குப் பிறகு ஒரு சமயம் இவர் எதுவும் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் உடல் சோர்ந்து அமர்ந்து விட்டார். திடீரென அவரது கண் முன்னால் வெள்ளை பன்றி ஒன்று வந்துள்ளது. உடனே அந்த பன்றியின் மீது மன்னன் அம்பை எய்துள்ளார்.
அம்பினால் தாக்கப்பட்டு அந்தப் பன்றி தலை தெறிக்க ஓடி உள்ளது. அதன் பின்னே மன்னர் துரத்திச் சென்றார். நீண்ட தூரம் மோடி அந்த பன்றி திடீரென ஒரு புதருக்குள் பதுங்கி விட்டது. உடனே அங்கு மன்னர் சென்று பார்த்துள்ளார் அங்கே சுயம்புலிங்கம் இருந்துள்ளது. அதன் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்துள்ளது. உடனே கண்கலங்கிய மன்னன் சிவபெருமானை நினைத்து அழுதுள்ளார். உடனே சிவபெருமான் சுயரூபம் காட்டி நான் தான் உனக்காக பன்றியாக வந்தேன் எனக் கூறியுள்ளார். உடனே மன்னன் அதே இடத்தில் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9