HT Yatra: பக்தன் ஓய்வெடுத்த இடத்தில் காட்சி கொடுத்த சிவபெருமான்.. சுயம்புவாக எழுந்தருளிய ஏகாம்பரேஸ்வரர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: பக்தன் ஓய்வெடுத்த இடத்தில் காட்சி கொடுத்த சிவபெருமான்.. சுயம்புவாக எழுந்தருளிய ஏகாம்பரேஸ்வரர்

HT Yatra: பக்தன் ஓய்வெடுத்த இடத்தில் காட்சி கொடுத்த சிவபெருமான்.. சுயம்புவாக எழுந்தருளிய ஏகாம்பரேஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 24, 2024 06:00 AM IST

HT Yatra: சிவபெருமான் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் மிகப்பெரிய கோயில்களை கட்டி சென்றுள்ளனர் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் பல கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்.

பக்தன் ஓய்வெடுத்த இடத்தில் காட்சி கொடுத்த சிவபெருமான்.. சுயம்புவாக எழுந்தருளிய ஏகாம்பரேஸ்வரர்
பக்தன் ஓய்வெடுத்த இடத்தில் காட்சி கொடுத்த சிவபெருமான்.. சுயம்புவாக எழுந்தருளிய ஏகாம்பரேஸ்வரர்

இது போன்ற போட்டோக்கள்

மண்ணுக்காக போரிட்டு மன்னர்கள் வாழ்ந்து வந்தாலும் தங்களது கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காகவும் சிவபெருமான் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் மிகப்பெரிய கோயில்களை கட்டி சென்றுள்ளனர் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் பல கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் ஏகாம்பரேஸ்வரர் எனவும் தாயார் காமாட்சி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்த கோயிலில் இருக்கக்கூடிய தாயார் ஆவுடையார் மீது நின்ற காலத்தில் காட்சி கொடுத்து வருகிறார். ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு சாட்சியாக அர்த்தநாரீஸ்வரர் அம்சம் இருப்பது போல ஆவுடையார் மீது அம்பாள் காட்சி கொடுப்பது மேலும் சிறப்பாக கூறப்படுகிறது.

இந்த கோயிலில் சனி தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் அவர்களுக்கு தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. மேலும் பயம் நீங்க வேண்டுமென்றால் இங்கு வீற்றிருக்கக்கூடிய ஆஞ்சநேயருக்கு செந்தூரத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த கோயிலுக்கு வெளியே இருக்கக்கூடிய அரச மரத்தின் அடியில் ஒரு லிங்கம் தனி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த லிங்கத்திற்கு கருவறை உள்ளே சென்று நாம் வழிபாடுகளை நடத்திக் கொள்ளலாம்.

தல வரலாறு

பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இருந்த ஒரு பக்தர் காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டு இருக்கக்கூடிய ஏகாம்பரேஸ்வரரை அடிக்கடி வழிபட்டு வந்துள்ளார். அவருடைய தீவிர பக்தராக இருந்த இவருக்கு பிரதோஷ நாளில் கோயிலுக்கு சென்று வழிபாட வேண்டும் என நினைத்துள்ளார். பல தடைகளின் காரணமாக அங்கு செல்லவில்லை. மேலும் தனது வேலையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவருடைய முதலாளியும் கோயிலுக்கு அனுப்பவில்லை.

ஆனால் அந்த பக்தர் அனைத்து தடைகளையும் மீறி கோயிலுக்கு செல்ல வேண்டும் என நினைத்து தொந்தரவுகளை கலைந்து விட்டு கோயிலுக்கு சென்றுள்ளார். இடையில் சோர்ந்து போன இவர் வழியில் ஒரு இடத்தில் ஓய்வெடுத்துள்ளார். அப்போது சிவபெருமான் அம்பாளோடு காட்சி கொடுத்துள்ளார்.

இனிமேல் இவ்வளவு தூரம் பயணம் செய்து என்னை காண நீ வர வேண்டாம் நீ ஓய்வெடுத்த இந்த இடத்திலேயே நான் சுயம்புவாக காட்சி கொடுக்கின்றேன் இந்த இடத்திலேயே நீ வழிபடலாம் என கூறி சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளினார். அதே இடத்தில் கோயில் கட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது அந்த தளம் தான் தற்போது இருக்கக்கூடிய அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner