HT Yatra: சித்தரை சந்தேகப்பட்ட மன்னர்.. அனைவரையும் கதிகலங்க விட்ட சித்தர்.. ஆசிகள் கொடுத்த ஆதிசக்தீஸ்வரர்
HT Yatra: பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் வரலாறுகளை கூறுகின்ற அளவில் மிக கம்பீரமாக அத்தனை சிவபெருமான் கோயில்களும் நின்று வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டத்தில் உள்ள கோபுராபுரம் அருள்மிகு ஆதிசக்தீஸ்வரர் திருக்கோயில்.

HT Yatra: உலகத்தில் இருக்கக்கூடிய கடவுளுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். அன்றிலிருந்து இன்றுவரை இவருக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. திரும்பும் திசையெல்லாம் சிவமயம் என்று கூறும் அளவிற்கு எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆதிகாலம் தொடங்கி தொழில்நுட்ப காலம் வரை சிவபெருமானுக்கு கோயில் அமைக்கப்பட்ட வழிபாடுகள் நடத்தப்படுவது வெகு விமர்சையாக இன்று வரை நடந்து வருகிறது. மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமான் ஆதிக்க கடவுளாக திகழ்ந்த வருகின்றார். வெவ்வேறு களங்களில் நின்று போரிட்டு மன்னர்கள் வாழ்ந்த காலத்திலேயே அனைத்து மன்னர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.
மண்ணுக்காக போரிட்டு வந்த காலத்திலும் மாற்றாக தங்கள் கலைநயத்தையும், சிவபக்தியையும் வெளிப்படுத்துவதற்காகவே போட்டி போட்டுக்கொண்டு மிகப்பெரிய கோயில்களை மன்னர்கள் கட்டியுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் வரலாறுகளை கூறுகின்ற அளவில் மிக கம்பீரமாக அத்தனை சிவபெருமான் கோயில்களும் நின்று வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டத்தில் உள்ள கோபுராபுரம் அருள்மிகு ஆதிசக்தீஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் ஆதிசக்தீஸ்வரர் எனவும் தாயார் ஆதிசக்தீஸ்வரி எனவும் அழைக்கப்படுகின்றன. தல விருட்சமாக இலந்தை மரம் விளங்கி வருகிறது. தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தீர்த்தக் குளத்தில் குளித்துவிட்டு சிவபெருமானை வழிபட்டால் அந்த நோய் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அதேபோல நந்தி பாராயணம் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நமக்குள்ள வியாதிகள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
சசிவரணர் என்ற அந்தணர் மது அருந்து கொண்டு மாமிசம் சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். அதற்குப் பிறகு அவரது உருவம் குலைந்து உள்ளது. கை இழந்து வாழ்ந்து வந்துள்ளார். அதன் பின்னர் நந்தி பாராயண சித்தர் குறித்து கேள்விப்பட்டு அவரிடம் சென்று சசிவரணர் தன்னைக் காக்க வேண்டி கூறியுள்ளார்.
உடனே தீர்த்த குளத்தில் குளித்துவிட்டு நேராக ஆதிச்தீஸ்வரரை அன்போடு வழிபட்டால் உனக்கு விமோச்சம் கிடைக்கும் என கூறியுள்ளார். அதேபோல நடந்த காரணத்தினால் ஆதிச்தீஸ்வரர் மீது அன்பு கொண்டு அவருக்கு சேவகம் செய்து வந்தார்.
சசிவரணர் நந்தி பாராயணம் இருவருக்கும் ஆதிசக்தீஸ்வரர் காட்சி கொடுத்தார். இவர்கள் இருவருடைய ஜீவசமாதிகளும் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளன.
தல வரலாறு
நந்தி பாராயணர் என்ற சித்தர் கோபுராபுரம் என்ற ஊரில் வெகு காலம் தவமிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மன்னர் ஒருவர் தன்னுடன் வந்திருக்கக் கூடிய பரிகாரங்களை நீங்கள் நிஷ்டையில் ஆழ்த்தினால் உங்களை உண்மையான சித்தர் என்று நான் நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
அடுத்த நிமிடமே சித்தர் பார்வை பட்ட உடனே அங்கு வந்திருந்த அனைவரும் நிஷ்டையில் ஆழ்ந்து விட்டனர். இதனால் சித்தரின் மகிமையை உணர்ந்த மன்னர் தனது தவறை மன்னிக்க வேண்டி அவரிடம் தஞ்சம் அடைந்தார். அதன் பின்னர் சித்தர் நிஷ்டையில் இருந்த அனைவரையும் சுயநினைவுக்கு கொண்டு வந்தார். அதன் பின்னர் ஆதிசக்திஸ்வரருக்கு அந்த மன்னர் கோயில் எழுப்பி வழிபட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
