புதன்கிழமையில் பிறந்தவர்களா நீங்கள்?.. அப்ப இதெல்லாம் உங்களிடம் இருக்குமே.. வேற லெவல் போங்க!
Wednesday: பல்வேறு குணாதிசயங்களை அந்த கிழமைகளில் பிறந்தவர்கள் பெற்றிருப்பார்கள். அந்த வகையில் ஏழு கிழமைகளும் சிறப்பான கிழமைகளாக இருந்தாலும் புதன்கிழமைக்கு தனி மகத்துவம் உள்ளது. அப்படி புதன் கிழமையில் பிறந்தவர்களுக்கு என்னென்ன புதனால் குணாதிசயம் இருக்கும். என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களின் செயல்பாடுகளை பொருத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக குறிப்பிட்ட காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் செயல்பாடுகளால் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம்.
ஒரு வாரத்தில் ஏழு நாட்கள், ஏழு கிழமைகள். உலகத்தில் பிறக்கக் கூடிய அனைவரும் ஏதோ ஒரு நாள், ஏதோ ஒரு கிழமையில் பிறந்திருப்பார்கள். அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு ஏற்றவாறு பல்வேறு குணாதிசயங்களை அந்த கிழமைகளில் பிறந்தவர்கள் பெற்றிருப்பார்கள்.
அந்த வகையில் ஏழு கிழமைகளும் சிறப்பான கிழமைகளாக இருந்தாலும் புதன்கிழமைக்கு தனி மகத்துவம் உள்ளது. அப்படி புதன் கிழமையில் பிறந்தவர்களுக்கு என்னென்ன புதனால் குணாதிசயம் இருக்கும். என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
புதன்கிழமை
ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை பல்வேறு விதமான நிகழ்வுகள் அவருடைய பயணத்தில் ஏற்படுகின்றன. அனைத்து விதமான ஏற்ற மற்றும் தாழ்வுகள் அனைத்தும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் மாற்றம் அடையும். அந்த வகையில் புதன்கிழமையில் பிறந்தவர்களுக்கு திருமண வாழ்க்கை, வேலை மற்றும் தொழில் அவர்களுடைய குணாதிசயம் உள்ளிட்டவர்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நேர்மையான எண்ணங்கள்
புதன்கிழமையில் பிறந்தவர்களுக்கு கூர்மையான அறிவு இருக்கும் பல துறைகளிலும் வெற்றி அடையக் கூடிய திறமை கொண்டவர்கள். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தனக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளக் கூடியவர்கள். இதனால் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பல்வேறு விதமான இன்னல்களை சமாளிக்க கூடிய அளவிற்கு தங்களுக்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்வார்கள். கல்வி மட்டும் இன்றி வாழ்க்கையில் அனைத்து விதமான துறைகளிலும் சிறப்பு மிகுந்தவர்களாக இருப்பார்கள்.
எதிர்மறை
புதன்கிழமை பிறந்தவர்கள் அமைதியாக இருந்தாலும் கோபப்படும் பொழுது உச்சத்தில் இருப்பார்கள். அவர்களை ஆசுவாசப்படுத்துவது என்பது மிகவும் கடினமாகும். தங்களது கருத்துக்களில் இருந்து அவ்வளவு எளிதில் மாறிவிட மாட்டார்கள். அவர்களுடைய பார்வையில் மோசமானவர்கள் என நினைத்து விட்டால் அவர்கள் கடைசி வரை மோசமானவர்கள் தான். ஆனால் பல நாள் கவனித்து அவர்களை திட்டமிட்டு கவனித்து வெளியேற்றுவார்கள்
ஆளுமை திறன்
பிறப்பிலேயே இவர்கள் அறிவுக்கூர்மை அதிகம் இருக்கின்ற காரணத்தினால் எப்பொழுதும் தங்களது இலக்குகளை நோக்கி பயணிப்பார்கள். தங்களது திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவார்கள் பலரிடமும் அறிவுரை கேட்டாலும் தான் முடிவு செய்வதை செய்யக் கூடியவர்கள். ஆபத்துகள் பலமுறை தேடி வந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் வெற்றியை நோக்கி பயணம் செய்யக் கூடியவர்கள். குடும்பத்திற்காக எதையும் செய்யக்கூடிய நிலைக்கு இறங்குவார்கள்.
திருமண வாழ்க்கை
புதன்கிழமை பிறந்தவர்களுக்கு பல்வேறு குணாதிசயங்கள் இருந்தாலும் நேசிக்கும் ஒருவர் மீது எப்போதும் மாறா பற்றோடு இருப்பார்கள். எளிதில் எவரையும் ஏமாற்ற மாட்டார்கள். ஆழமான அன்பை வெளிப்படுத்தக்கூடிய இவர்கள் சரியான வாழ்க்கை துணையை எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். நினைத்தது போல் வாழ்வதற்கு அதிக திறன் கொண்டவர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9