தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Surya Luck: அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் சூரியன்.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. நீங்க என்ன ராசி இன்னும் பாக்கலாமா?

Surya Luck: அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் சூரியன்.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. நீங்க என்ன ராசி இன்னும் பாக்கலாமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 30, 2024 05:33 PM IST

Lord Surya: சூரிய பகவான் கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும் சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால் சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பான யோகத்தை கொடுக்கப் போகின்றது.

அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் சூரியன்.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. நீங்க என்ன ராசி இன்னும் பாக்கலாமா?
அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் சூரியன்.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. நீங்க என்ன ராசி இன்னும் பாக்கலாமா?

மைய கிரகமாக விளங்கக்கூடிய சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்யும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

அந்த வகையில் ரிஷப ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும் சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால் சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பான யோகத்தை கொடுக்கப் போகின்றது. ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

சூரிய பகவானின் இடமாற்றம் உங்கள் ராசியில் முதல் வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் மொத்தமாக குறையும்.

சிம்ம ராசி

உங்கள் ராசிகள் 11-வது வீட்டில் சூரியன் பயணம் செய்த வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் பண வரப்பில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் எடுத்துக்கொண்ட காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகும். 

தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் வலிமை அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். விரும்பிய இடம் மாற்றம் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல யோகம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9