ஆஞ்சநேயர் இப்படித்தான் வந்தார்.. அர்ஜுனனின் ஆணவம் முடிந்தது.. காட்சி கொடுத்த கிருஷ்ண பரமாத்மா!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஆஞ்சநேயர் இப்படித்தான் வந்தார்.. அர்ஜுனனின் ஆணவம் முடிந்தது.. காட்சி கொடுத்த கிருஷ்ண பரமாத்மா!

ஆஞ்சநேயர் இப்படித்தான் வந்தார்.. அர்ஜுனனின் ஆணவம் முடிந்தது.. காட்சி கொடுத்த கிருஷ்ண பரமாத்மா!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 16, 2025 06:00 AM IST

மகாபாரதப் போரில் அர்ஜுனனின் தேர் கொடியில் ஆஞ்சநேயர் இருப்பதை நாம் கண்டிருப்போம். பொதுவாக போரில் பயன்படுத்தப்படுவது அந்தந்த நாட்டின் முத்திரை பதிக்கப்பட்ட கொடிகள்தான். ஆனால் மகாபாரத போரில் அர்ஜுனனின் தேர் கொடியில் ஆஞ்சநேயர் இருப்பதற்கு பலருக்கும் காரணம் தெரியாமல் இருக்கும்.

ஆஞ்சநேயர் இப்படித்தான் வந்தார்.. அர்ஜுனனின் ஆணவம் முடிந்தது.. காட்சி கொடுத்த கிருஷ்ண பரமாத்மா!
ஆஞ்சநேயர் இப்படித்தான் வந்தார்.. அர்ஜுனனின் ஆணவம் முடிந்தது.. காட்சி கொடுத்த கிருஷ்ண பரமாத்மா!

இது போன்ற போட்டோக்கள்

மகாபாரதப் போரில் அர்ஜுனனின் தேர் கொடியில் ஆஞ்சநேயர் இருப்பதை நாம் கண்டிருப்போம். பொதுவாக போரில் பயன்படுத்தப்படுவது அந்தந்த நாட்டின் முத்திரை பதிக்கப்பட்ட கொடிகள்தான். ஆனால் மகாபாரத போரில் அர்ஜுனனின் தேர் கொடியில் ஆஞ்சநேயர் இருப்பதற்கு பலருக்கும் காரணம் தெரியாமல் இருக்கும்.

அர்ஜுனன் கேள்வி

வில் வித்தையில் சிறந்தவனாக திகழ்ந்து வந்தார் அர்ஜுனன். அதேபோல ராமாயணத்தில் வில் வித்தையில் மிகப்பெரிய ஜாம்பவானாக ராமர் திகழ்ந்து வந்தார். அர்ஜுனனுக்கு ஒரு முறை சந்தேகம் ஏற்பட்டது. ராமர் தான் வில் வித்தையில் மிகப்பெரிய வீரர் ஆயிற்றே, ஆனால் அவரால் ஏன் அம்புகளைக் கொண்டு சேது பாலத்தை கட்ட முடியவில்லை தெய்வ அம்சமான ராமர் எதற்காக வானரங்களை பயன்படுத்தினார் என கேள்வி தோன்றியது. அதை கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்தார்.

அர்ஜுனனின் சவால்

அர்ஜுனன் யோசித்தபடி சென்று கொண்டிருக்க அருகே இருந்த நதிக்கரையில் வானரத்தின் உருவத்தில் ராம நாமத்தை ஜெபித்தபடி ஆஞ்சநேயர் அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம் அர்ஜுனன், வானரமே உங்களுடைய ராமன் உண்மையில் சிறந்த வில்வித்தை வீரன் என்றால் வில்லிலேயே பாலம் கட்டு இருக்கலாமே உங்களை ஏன் உதவிக்கு அழைத்தார் என அலட்சியமாக ஆஞ்சநேரிடம் கேட்டார்.

அப்போது அர்ஜுனனின் ஆணவத்தை அடக்க ஆஞ்சநேயர் நினைத்தார். உடனே, அம்புகளால் அமைக்கப்படும் சரப்பாலம் என் ஒருவனுடைய பாரத்தை தாங்குவதே கடினம் அப்படி இருக்கையில் ஒட்டுமொத்த மாணவர்களின் பாரத்தையும் எப்படி அது தாங்கும் என ஆஞ்சநேயர் பதிலளித்தார். உடனே அர்ஜுனன், ஏன் தாங்காது நீ மட்டுமல்ல உன்னைப்போல எத்தனை வானங்கள் வந்தாலும் தாங்கக்கூடிய உறுதியான பாலத்தை இந்த நதியின் குறுக்கே நான் கட்ட முடியும் என கூறினார்.

ஆஞ்சநேயரின் வேண்டுதல்

தனது பானத்தின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக அர்ஜுனன் பந்தயம் ஒன்றை போட்டார். நான் கட்டும் பாலம் உடைந்து போனால் வேள்வி ஒன்றை வளர்த்து அந்த தீயில் நான் குதித்து விடுகிறேன் என அர்ஜுனன் பந்தயம் கட்டினார். உடனே ஆஞ்சநேயர், இந்த பந்தயத்தில் நான் தோற்றால் என் ஆயுள் முழுவதும் உனக்கு அடிமையாக உனது தேர்க்கொடியில் இருப்பேன் என கூறி ராம நாமத்தை ஜெபிக்க தொடங்கினார்.

அர்ஜுனன் பாலத்தை கட்டி முடித்ததும் அதில் ஏறி வானர ரூபத்தில் இருந்து ஆஞ்சநேயர் காலை வைத்தார் உடனே அந்த பாலம் சரிந்தது. உடனே அவமானத்தால் அர்ஜுனன் தலை குனிந்தார். பார்த்தாயா, எனது ராமனின் சக்தியை என்று கூறி ஆஞ்சநேயர் பலமாக சிரித்தார்.

உடனே கூறிய வாக்கின்படி கிருஷ்ணனை நினைத்து அர்ஜுனன் வேள்வி தீ வளர்த்து அதில் குதிக்கப் போனார். ஆஞ்சநேயர் தடுத்தும் அர்ஜுனன் பின் வாங்கவில்லை.

கண்ணன் வருகை

இந்த சம்பவம் நடக்கும் பொழுது அவர்களின் பின்புறம் ஒரு குரல் கேட்டது. திடீரென அந்தணர் ஒருவர் அங்கே வந்தார். நடந்தவற்றை ஆஞ்சநேயர் விளக்கி கூறினார். பந்தயம் என்றால் சாட்சி இருக்க வேண்டும் சாட்சி இல்லாமல் நடக்கும் பந்தையும் செல்லாது என அந்தணர் கூறினார். இருவரும் அந்தணர் கூறியதை ஏற்றுக்கொண்டனர்.

மீண்டும் பாலத்தைக் கட்டு அர்ஜுனா என அந்த அந்தணர் கூறினார். கிருஷ்ணரை மனதில் வேண்டிக்கொண்டு கிருஷ்ணா கிருஷ்ணா எனக்கூறி அந்த பாலத்தை அர்ஜுனர் கட்டி முடித்தார். ஏற்கனவே பாலம் உடைந்தது எண்ணி அகம்பாவத்தில் ராம நாமம் கூறாமல் ஆஞ்சநேயர் அந்த பாலத்தின் மீது காலை வைத்தார். ஆஞ்சநேயர் என்ன செய்தாலும் அந்த பாலம் உடையவில்லை. உடனே அர்ஜுனன் பார்த்தாயா கிருஷ்ணனின் சக்தியை எனக்கூறி கிருஷ்ணன் தான் பெரியவர் என அர்ஜுனன் கூறினார்.

ஜெபமே வென்றது

உடனே ஆஞ்சநேயர் குழப்பம் அடைந்தார். அங்கே இருந்த அந்தணர் நீங்கள் யாரும் வெல்லவில்லை எனக் கூறி சங்கு சக்கரத்தோடு விஷ்ணு பகவான் காட்சி கொடுத்தார். நீங்கள் இருவரும் தோற்கவில்லை வென்றது இறைவனின் பக்தி மற்றும் ஜெபம் தான். அர்ஜுனன் முதலில் பாலம் கட்டிய பொழுது தான் என்ற கர்ப்பம் அர்ஜுனனுக்கு இருந்தது. அப்போது ஆஞ்சநேயர் ராம நாமத்தை ஜெபித்தார். ராம நாமம் எப்போதும் தோற்காது. அதனால் ஆஞ்சநேயர் வெற்றியடைந்தார்.

இரண்டாவது முறை ஆணவத்தில் இருந்த அர்ஜுனன் கிருஷ்ணனை நினைத்தபடி பாலத்தை கட்டினார். ஆனால் அகம்பாவத்தோடு இருந்த ஆஞ்சநேயரின் தலைகணம் தோற்றது. அதனால் அர்ஜுனனின் பக்தி வென்றது. மொத்தத்தில் இருவரின் பக்தியும் தான் இந்த இடத்தில் வென்றதே தவிர நீங்கள் யாரும் வெல்லவில்லை என மகாவிஷ்ணு கூறினார்.

தேர் கொடியில் ஆஞ்சநேயர்

வானரமாக இருந்த ஆஞ்சநேயர் யார் என்பதை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு எடுத்துரைத்தார். மேலும் நடக்கப் போகும் மகாபாரத போரில் உன்னுடைய உதவி அர்ஜுனனுக்கு தேவை என ஆஞ்சநேயரிடம் கிருஷ்ணர் கூறினார். போர் முடியும் வரை அர்ஜுனனின் தேர்க்கொடியில் இருந்து நீ காக்க வேண்டும் என ஆஞ்சநேயரிடம் கிருஷ்ணர் கூறினார். ஆஞ்சநேயர் இருக்கும் இடத்தில் எந்த மந்திர தந்திர வேலைகளும் நடக்காது.

கிருஷ்ணரின் வேண்டுகோளை ஏற்ற ஆஞ்சநேயர், அர்ஜுனனின் பொற்கொடியில் இருக்க சம்மதத்தை தெரிவித்தார். அதன் காரணமாகவே மகாபாரதப் போரில் கௌரவர்கள் தொடுத்த அம்புகள் எதுவும் அர்ஜுனனை பாதிக்கவில்லை. இப்படித்தான் அர்ஜுனனின் தேர் கொடியில் ஆஞ்சநேயர் அமர்ந்தார்.