ஹோலி 2025: நினைத்ததை நிறைவேற்றும் பரிகாரங்கள்.. ஹோலி பண்டிகை நாளில் இதை மட்டும் செய்யுங்க போதும்!
Holi 2025: ஹோலி பண்டிகை திருநாள் அன்று குறிப்பிட்ட சில பரிகாரங்களை செய்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது. கோழி பண்டிகை திருநாள் என்று நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.

Holi 2025: ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக நமது நாட்டில் வாழக்கூடிய மக்கள் தற்போது தயாராகி வருகின்றனர். இந்த திருநாள் கொண்டாட்டத்திற்காக மட்டுமல்லாமல் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகளை ஏற்படுத்தும் நாளாகவும் திகழ்ந்து வருகின்றது. இந்த நாளில் செய்யப்படும் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நமக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Mar 16, 2025 04:07 PMமார்ச் 17ஆம் தேதி மேஷம் முதல் கன்னி ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 02:55 PMமீனத்துக்குச் சென்ற சூரியன்.. பிற்போக்காக திரும்பிய புதன்.. சிக்கிய பணத்தை மீட்டு சிம்மாசனம் போட்டு அமரப்போகும் ராசிகள்
Mar 16, 2025 01:08 PMசூரியன் - புதன் - சுக்கிரன் சேர்க்கை.. படிப்படியாக லாபம் பெறும் மூன்று அதிர்ஷ்டக்கார ராசிகள்
Mar 16, 2025 10:43 AMமீன ராசியில் புதன் வக்ர நிலை.. தொழில் நெருக்கடியை அடித்து ஓட விடப்போகும் 3 ராசிகள்
Mar 16, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பண மழையில் நனையும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கமா.. எச்சரிக்கையா இருக்க வேண்டியது யார் பாருங்க!
Mar 15, 2025 05:49 PMராகு புதன் சேர்க்கை: 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ல் சேரும் ராகு புதன்.. குபேர கடலில் நீந்த போகும் 3 ராசிகள்..!
அந்த வகையில் ஹோலி பண்டிகை திருநாள் அன்று குறிப்பிட்ட சில பரிகாரங்களை செய்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது. கோழி பண்டிகை திருநாள் என்று நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| கேது பகவானின் உச்சயோகத்தை பெற்ற ராசிகள்
பரிகாரங்கள்
கோழி பண்டிகை இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கிய திருநாளில் ஒன்றாகும். இந்த திருநாள் 2025 ஆம் ஆண்டு மார்ச் 13 மற்றும் 14ம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த புனித நாளில் மக்கள் அனைவரும் புதிய தொடக்கத்திற்காக இஷ்ட தேவதையை நினைத்து வழிபாடுகள் செய்வார்கள். அப்படி குறிப்பிட்ட சில பரிகாரங்கள் நமது கனவுகளை நிறைவேற்றும என கூறப்படுகிறது அது என்னென்ன பரிகாரங்கள் என்பது குறித்து இங்கு காணலாம்.
இனிப்பு வழங்குவது
இந்த ஹோலி பண்டிகை திருநாளில் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவுகளை வழங்குவது நமது செல்வ செழிப்பை அதிகரித்து கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ஹோலி பண்டிகை திருநாளில் இந்தியாவின் வட மாநிலங்களில் இனிப்புகள் வழங்குவது ஒரு பாரம்பரிய செயலாக கருதப்பட்டு வருகிறது. வீட்டில் தயாரிக்கப்படும் இணைப்புகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் அதிக சுபீட்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| செவ்வாய் பகவானின் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்!
வாஸ்து பரிகாரம்
ஹோலி பண்டிகை திருநாளில் பச்சை சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களை உங்கள் இல்லத்தில் உபயோகித்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது. மஞ்சள் நிறம் அறிவுக்கூர்மை, பச்சை நிறம் நிதி முன்னேற்றம், சிவப்பு நிறம் வெற்றி போன்றவர்களை குறிக்கின்ற காரணத்தினால் இந்த நிறங்களை கொண்டு உங்கள் வீட்டை அலங்கரித்தால் அனைத்து சுபிட்சமும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
காயத்ரி மந்திரம்
ஹோலி பண்டிகை திருநாளில் குலதெய்வ மந்திரங்கள் அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிப்பது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. இந்த ஜெப வழிபாடு ஆனது நேர்மறை ஆற்றலை உருவாக்கி நாம் நினைத்த கனவுகளை நிறைவேற்றும் எனக்கு கூறப்படுகிறது. இது போன்ற ஜெப வழிபாட்டின் பொழுது நீங்கள் மஞ்சள் அல்லது சிவப்பு நிற உடைகளை அணிந்து வழிபட்டால் உங்களுக்கு சிறப்பு என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| சனி பகவானின் அஸ்தமனத்தில் ராஜயோகம் பெற்ற ராசிகள்!
பஞ்சபூத வழிபாடு
இந்த கோழி பண்டிகை திருநாளில் பிரபஞ்சத்தின் சக்தியாக விளங்கக்கூடிய பஞ்சபூதங்களை வழிபட்டால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதே சமயம் இந்த பஞ்சபூத வழிபாடு அனைவரது விருப்பங்களையும் நிறைவேற்றும் என கூறப்படுகிறது. பூஜை செய்யும் பொழுது குங்குமம், சந்தனம், தேன், நெய் உள்ளிட்ட சுத்தமான பொருட்களை பயன்படுத்துவது உங்களுக்கு பல நன்மைகளை கொடுக்கும் என கூறப்படுகிறது.
குங்கும பூஜை
இந்த ஹோலி பண்டிகை திருநாளில் மகாலட்சுமி தேவியை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் வாழ்வில் செல்வம் பெருகும் என கூறப்படுகிறது. இது மிகவும் முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது. மகாலட்சுமியை குங்குமத்தால் அர்ச்சனை செய்துவிட்டு அந்த குங்குமத்தில் இருந்து சிறிதளவு எடுத்து நீங்கள் வைத்திருக்கும் பணம் பெட்டியில் போட்டு தினமும் வழிபாடு செய்வது முன்னேற்றத்தை தரும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்