பிறப்பிலேயே ஆணவமாக இருக்கும் ராசிகள்.. இந்தப் பெண்கள் திமிர் பிடித்தவர்கள்.. மிகவும் ஜாக்கிரதையாக இருக்கணும்
ஒரு சில ராசிக்காரர்கள் மிகவும் ஆணவம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதில் ஆண் மற்றும் பெண் என்ற வேறுபாடு கிடையாது. அந்த வகையில் அதிக ஆணவம் கொண்ட பெண்களின் ராசிகள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 16, 2025 09:00 PMMarch 17 Tomorrow Rasipalan : வாரத்தின் முதல் நாளான மார்ச் 17 க்கான ராசிபலன் என்ன?
Mar 16, 2025 05:05 PMமார்ச் 17ஆம் தேதி துலாம் முதல் மீன ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 04:07 PMமார்ச் 17ஆம் தேதி மேஷம் முதல் கன்னி ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 02:55 PMமீனத்துக்குச் சென்ற சூரியன்.. பிற்போக்காக திரும்பிய புதன்.. சிக்கிய பணத்தை மீட்டு சிம்மாசனம் போட்டு அமரப்போகும் ராசிகள்
Mar 16, 2025 01:08 PMசூரியன் - புதன் - சுக்கிரன் சேர்க்கை.. படிப்படியாக லாபம் பெறும் மூன்று அதிர்ஷ்டக்கார ராசிகள்
Mar 16, 2025 10:43 AMமீன ராசியில் புதன் வக்ர நிலை.. தொழில் நெருக்கடியை அடித்து ஓட விடப்போகும் 3 ராசிகள்
12 ராசிகளுக்கும் கீழ் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயத்தை பெற்றிருப்பார்கள். இருப்பினும் அந்தந்த ராசிகளை ஆட்சி செய்யும் கிரகங்களின் பொறுத்து ஒரு சிலருக்கு பிறப்பிலேயே சிறப்பான குணங்கள் இருக்கும்.
ஒவ்வொரு ராசிக்காரரும் ஒவ்வொரு குணாதிசயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் ஒரு சில ராசிக்காரர்கள் மிகவும் ஆணவம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதில் ஆண் மற்றும் பெண் என்ற வேறுபாடு கிடையாது. அந்த வகையில் அதிக ஆணவம் கொண்ட பெண்களின் ராசிகள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
இந்த ராசிக்காரர்கள் மிகவும் மன தைரியம் மற்றும் உறுதியாக இருக்கக்கூடியவர்கள். தன்னம்பிக்கை மீது அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதன் காரணமாக எந்த வேலையிலும் மற்றவர்கள் ஈடுபடுத்த மாட்டார்கள். தனக்கான வேலைகளை தானே செய்து கொள்வார்கள் மற்றவர்கள் ஈடுபட்டால் அதனால் அவர்களுக்கு உங்கள் மீது கோபம் வரும். சில சமயங்களில் அதன் காரணமாக ஆணவமாக மேஷ ராசிக்காரர்கள் நடந்து கொள்வார்கள். மற்றவர்கள் வழிநடத்த முயற்சி செய்தால் அது இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. தனக்கான பாதையை தானே தேர்ந்தெடுத்து செயல்படுத்தக் கூடியவர்கள். இவர்கள் இதனால் கொஞ்சம் திமிர் பிடித்தவர்களாக மற்றவர்களுக்கு இவர்கள் தெரிவார்கள்.
சிம்ம ராசி
சூரிய பகவானால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் கம்பீரமானவர்கள் தன்னம்பிக்கை மற்றும் கவர்ச்சித் தன்மை கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் தன் தலைமையில் எதுவும் நடக்க வேண்டும் என விரும்பக் கூடியவர்கள். அதன் காரணமாக மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதில் முழுமையாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவார்கள். அதேசமயம் மற்றவர்களை விட தாராளமான மனப்பான்மை கொண்டவர்கள் அதிகம் அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். அங்கீகாரத்திற்கான தேவை சில நேரங்களில் இவருக்கு ஏற்படும். அப்போது இவர்கள் தங்களது ஆணவத்தை வெளிப்படுத்துவார்கள்.
விருச்சிக ராசி
எப்போதும் தங்களை மர்மமாக வைத்துக் கொள்ளக் கூடியவர்கள். இந்த ராசிக்காரர்கள் எதையும் அவ்வளவு எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள். அதிக தன்னம்பிக்கை மற்றும் தைரியம் இயல்பிலேயே இவர்களுக்கு உள்ளது. தன்னுடைய ஆழமான சிந்தனையை அதிகம் நம்பி செயல்பட கூடியவர்கள். மற்றவர்களை தன்னை ஆராய விட மாட்டார்கள். திரும்பத் திரும்ப அனைத்து விஷயங்களையும் தீவிர பரிசோதனை செய்து அதன் வழி நடப்பவர்கள். இதில் யாராவது தொந்தரவாக இருந்தால் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இது மிகவும் ஆணவச் செயலாக மற்றவர்களுக்கு தெரியும்.
மகர ராசி
தன் லட்சியத்தை நோக்கி எப்போதும் பயணம் செய்யக் கூடிய ராசிக்காரர்கள். இவர்கள் அசைக்க முடியாத மன உறுதியும் தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். சனி பகவானால் ஆட்சி செய்யும் ராசிக்காரர்கள் இவர்கள் என்பதால் எப்போதும் கடின உழைப்புக்கு தயாராக இருப்பார்கள். ஒரே சிந்தனையாக தன்னுடைய திட்டத்தில் ஈடுபட்டு வாழக்கூடியவர்கள். தொந்தரவு என ஏற்பட்டால் தன்னுடைய கோபத்தால் அனைத்தையும் நிவர்த்தி செய்து கொள்வார்கள். இதனால் இவர்கள் ஆணவம் மற்றும் திமிர் பிடித்தவர்களாக மற்றவர்களுக்கு தெரிவார்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
