தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here You Can Find Out About The Zodiac Signs In Which Rahu Gets Ketu Bhagwan Yoga

Rahu Ketu: ராகு கேது நட்சத்திர மாற்றம்.. இந்த ராசிகளுக்கு உச்சத்தில் யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 13, 2024 05:46 PM IST

ராகு கேது பகவான் யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கேது பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தங்களது இடத்தை மாற்றினார்கள். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுடைய இடமாற்றம் எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ அதே போல இவர்கள் இருவரின் நட்சத்திரம் மாற்றமும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ராகு பகவான் தற்போது ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் இடம் மாற்றம் செய்து பயணம் செய்து வருகின்றனர். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

ராகு கேது நட்சத்திர மாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. இந்த இடமாற்றம் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் குறையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திருமணத்தில் ஏற்பட்ட வந்த தடைகள் நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

ரிஷப ராசி

 

ராகு மற்றும் கேது அமைவிடம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கிரகங்களின் மாற்றம் உங்களுக்கு நிரந்தர மகிழ்ச்சியை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் வெளிநாட்டில் தங்குவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பல்வேறு விதமான துறைகளில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

மிதுன ராசி

 

ராகு கேதுவின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாக சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழில்நுட்பத் துறைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளால் பெற்றோர்களுக்கு சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றபடி உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.