சனி பலன்கள்: மேஷ ராசிக்கு ஏழரை சனி.. சனிப்பெயர்ச்சி எச்சரிக்கை.. கவனமாக இருப்பது நல்லது..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி பலன்கள்: மேஷ ராசிக்கு ஏழரை சனி.. சனிப்பெயர்ச்சி எச்சரிக்கை.. கவனமாக இருப்பது நல்லது..!

சனி பலன்கள்: மேஷ ராசிக்கு ஏழரை சனி.. சனிப்பெயர்ச்சி எச்சரிக்கை.. கவனமாக இருப்பது நல்லது..!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Feb 26, 2025 11:00 AM IST

Sani: சனி பகவான் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார். அந்த வகையில் சனிப்பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை கொடுக்கப் போகின்றது என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி பலன்கள்: மேஷ ராசிக்கு ஏழரை சனி.. சனிப்பெயர்ச்சி எச்சரிக்கை.. கவனமாக இருப்பது நல்லது..!
சனி பலன்கள்: மேஷ ராசிக்கு ஏழரை சனி.. சனிப்பெயர்ச்சி எச்சரிக்கை.. கவனமாக இருப்பது நல்லது..!

இது போன்ற போட்டோக்கள்

மேஷ ராசி பொது பலன்

ஜோதிட சாஸ்திரத்தின் படி ராசிகளின் வரிசையில் முதல் ராசியாக இருப்பது மேஷ ராசி இந்த ராசியில் சனி பகவான் நீசம் அடைவார். சூரிய பகவான் கூச்சம் அடையக்கூடிய ராசி. எனது சனியின் முதல் பகுதியான விரைய சனி உங்களுக்கு தொடங்க உள்ளது. இதன் காரணமாக உங்களுக்கு எதிர்பார்த்ததை விட செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

தங்கத்தில் மீது முதலீடு செய்வது உங்களுக்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. உங்களால் முடிந்த வரை மற்றவர்களுக்கு அன்னதானம் செய்வது முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. செலவுகளை சுபச் செலவுகளாக மாற்றிக் கொள்வது உங்களுக்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது.

உடல் ஆரோக்கியம்

ஏழரை சனி தொடங்கிய காரணத்தினால் நீங்கள் மிகவும் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் உடல் பராமரிப்பில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது. மேலும் உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. உடற்பயிற்சி செய்வதில் நீங்கள் அதிகமாக காட்ட வேண்டும் என கூறப்படுகிறது. 

சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வதில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிடுகிறது. சலுகைகள் செல்லும் போது விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. சனி பகவானின் பார்வை உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் விழுகின்ற காரணத்தினால் நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது.

தொழில் பலன்கள்

உங்கள் வாழ்த்துக்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிதானமாக செயல்படுவது உங்களுக்கு நல்லது என கூறப்படுகிறது. 

புதிய முதலீடுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என கூறப்படுகிறது. மிகப்பெரிய முதலீடுகள் குறித்து நீங்கள் நிதி ஆலோசகர்களிடம் ஆலோசனை செய்வது மிகவும் நல்லது என கூறப்படுகிறது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது.

வேலை பலன்கள்

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நெருக்கடியான சூழல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு பணி சுமையை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. வேறு இடத்திற்கு வேலை செய்யக்கூடிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. 

சக ஊழியர்களோடு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலையில் ஏற்படக்கூடிய அழுத்தம் உங்களை அந்த இடத்தை விட்டு வெளியேற செய்யும் அளவிற்கு தூண்டும், எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது என கூறப்படுகிறது.

நிதிநிலை மற்றும் கல்வி பலன்கள்

மேஷ ராசிக்காரர்கள் பள்ளிப்படிப்பில் அதிக கவனம் செலுத்துவது மிகவும் நல்லது என கூறப்படுகிறது. ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் பல்வேறு விதமான சிரமங்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. சில மாணவர்கள் கல்வி வாழ்க்கையிலும் தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானத்திற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. பணவரவு உங்களுக்கு சற்று தாமதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிலையில் உங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையில் உங்களுக்கு அமையும் என கூறப்படுகிறது. விரைய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்ற காரணத்தினால் அதனை சுபச் செலவுகளாக மாற்றிக் கொள்வது நல்லது என கூறப்படுகிறது.

குடும்ப வாழ்க்கை

குறிப்பாக சனி பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நாக்கில் அமைந்துள்ள காரணத்தினால் நீங்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடையே உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். உறவினர்களால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் உங்களுக்கு விரக்தி ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் எனக்கு கூறப்படுகிறது. 

தேவையற்ற சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. வாழ்க்கைத் துணையால் உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தால் நீங்கள் மிகவும் கவனமாக பயணம் செய்ய வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது..

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.