தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here Will See Daily Horoscope For March 24

Today Rasi Palan: இந்த ராசி நபர்கள் கொஞ்சம் பாத்து இருக்கணும்

Aarthi V HT Tamil
Mar 24, 2023 06:18 AM IST

மார்ச் 24 ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

ராசிபலன்கள்
ராசிபலன்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

எதிர்பாராத நேரத்தில் தேவையான உதவிகள் நண்பர்கள் மூலம் கிடைக்கும். இன்று தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வியாபாரத்தில் மந்தமாக சூழ்நிலை ஏற்படும். பெற்றோர்களுக்கு, பிள்ளைகளால் மனக்கவலை அதிகரிக்கும்.

ரிஷபம்

வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும். உங்கள் வேலைகளை சாதித்துக் கொள்வீர்கள்.

மிதுனம்

அரசாங்கத்தால் இன்று அனுகூலம் ஏற்படும். எந்த வேலையையும் அக்கறையோடு செய்வீர்கள். உங்களுக்கு பெருமையும், செல்வமும் கிடைக்கும். நிலம், வீடு வாகனம் வாங்கும் போது கவனமாக இருக்கவும். முதலீடுகள் செய்யும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.

கடக ராசி

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட வேண்டாம். தடைபட்டிருந்த திருமணம் கை கொடுக்கும். அலைச்சல் அதிகமானாலும் நினைத்த காரியம் நடக்கும்.

சிம்மம்

ரியல் எஸ்டேட் தொழில் நல்ல லாபம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவார்கள். வீட்டில் அனைவரிடமும் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

கன்னி ராசி

இன்று கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்னை தேடி வரும். பண வரவு சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும்..

துலாம்

வழக்கில் வெற்றி கிடைக்கும். இழுபறியில் உள்ள பிரச்னை முடிவுக்கு வரும். செல்வம் காலியாக வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். அண்டை, அயலாருடன் மனக்கசப்பு ஏற்படும்.

விருச்சிகம்

பணவரவு உங்களுக்கு ஏற்றார் போல் இருக்கும். பொருளாதார சிக்கல்கள் இருக்காது. தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் நல்ல லாபம் கிடைக்கும். தேவையில்லாத செலவுகள் உண்டாகும். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது

தனுசு

சொத்து சிக்கல்கள் தீர சற்று தாமதமாகும். நிலம் சம்பந்தப்பட்ட முதலீடுகளில் முன்னேற்றம் கிடைக்கும். பணவரவு தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான விஷயங்கம் நடக்கும். கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

மகரம்

உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பயணம் தொடர்பான தொழில்களில் லாபம் கிடைக்கும்.

கும்பம்

பண வரவு சற்று தாமதமாகும். புதிதாகத் தொழில் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. உங்கள் முயற்சியால் எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும்.

மீனம்

பழைய பாக்கி வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளிடம் கோப்படாமல் இருப்பது நல்லது.

WhatsApp channel

டாபிக்ஸ்