மேஷ ராசி 2025 புத்தாண்டு ராசிபலன்: திருமண காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?.. சனி என்ன செய்வார்.. பொருளாதாரம் உயருமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷ ராசி 2025 புத்தாண்டு ராசிபலன்: திருமண காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?.. சனி என்ன செய்வார்.. பொருளாதாரம் உயருமா?

மேஷ ராசி 2025 புத்தாண்டு ராசிபலன்: திருமண காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?.. சனி என்ன செய்வார்.. பொருளாதாரம் உயருமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Dec 03, 2024 03:18 PM IST

New Year Horoscope 2025: இந்த 2025ஆம் ஆண்டு மேஷ ராசியினருக்கு காதல், திருமணம் மற்றும் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும். மேலும் அதற்கான பரிகாரங்கள் என்ன? என்பது குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி 2025 புத்தாண்டு ராசிபலன்: திருமண காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?.. சனி என்ன செய்வார்.. பொருளாதாரம் உயருமா?
மேஷ ராசி 2025 புத்தாண்டு ராசிபலன்: திருமண காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?.. சனி என்ன செய்வார்.. பொருளாதாரம் உயருமா?

இது போன்ற போட்டோக்கள்

திருமண மற்றும் காதல் வாழ்க்கை

திருமண வாழ்க்கையை பொறுத்த அளவில் உங்களுக்கு மிகவும் இனிமையாக இருக்கும். உறவினர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். விட்டுக் கொடுத்துச் சென்றால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த ஆண்டில் நீங்கள் மிகவும் வாழ்க்கை துணையோடு நெருக்கமாக இருக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். இந்த ஆண்டின் முதல் பாதி உங்களுக்கு மிகவும் அருமையாக இருக்கும். இரண்டாவது பகுதியில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கை பொறுத்தவரை உங்களுக்கு புரிதல்கள் அதிகமாக இருக்கும். நம்பிக்கையோடு இருப்பது மிகவும் அவசியமாகும். பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் உங்களுக்குள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையற்ற விஷயங்களை மூக்கை நுழைக்காமல் இருந்தால் உங்களுக்கு மிகவும் நல்லது. அவ்வப்போது உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே காதல் வாழ்க்கையில் புரிதலோடு செயல்படுவது அவசியமாகும்.

நிதிநிலை

2025 ஆம் ஆண்டு உங்களுக்கு நிதி நிலைமையை மிகவும் மந்தமாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையற்ற வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதன் மூலம் உங்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். 

செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். உங்கள் ராசியில் விரய சனி தொடங்குகின்ற காரணத்தினால் பண விரயம் அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிர்பார்க்காத நேரத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான செலவுகள் ஏற்படக்கூடும். பணப்பரிவர்த்தனைகள் இல்லாமல் சொத்து மற்றும் வாகனம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதலீடு செய்வது உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது ஏற்றத்தாழ்வுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சனி பகவானின் மாற்றத்தால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மூன்று மற்றும் நான்காம் வீட்டில் குரு பகவான் மாறும் பொழுது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். தேவையற்ற அலைச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பரிகாரங்கள்

முருகப்பெருமான் வழிபாடு உங்களுக்கு மிகவும் அவசியமாகும். உங்கள் படுக்கை அறையில் தென்மேற்கு மூலையில் மயில் இறகுகளை வைத்தால் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கக்கூடும். கோபத்தை கட்டுப்படுத்தினால் குருபகவான் உங்களுக்கு கட்டாயம் செய்வார் என கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டால் உங்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் அனைத்தும் குறையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner