Tamil News  /  Astrology  /  Here We Will See Three Rasis Which Will Be Given Yoga By Guru Bhagavan

Guru Bhagavan: குரு யோகம் தொடங்கிவிட்டது..இந்த ராசிகளுக்கு யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 08, 2024 10:44 AM IST

குரு பகவானால் யோகத்தை தரப்போகும் மூன்று ராசிகளை இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குரு பகவான். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்களுக்கு சாதகமாக இருக்க போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

 

மே மாதம் தொடங்கியதும் உங்களுக்கு நல்ல யோகம் தொடங்கிவிட்டது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தை மட்டும் சற்று கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வெளியே உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. மற்றபடி சொகுசு வாழ்க்கைக்கு எந்த குறைச்சலும் இருக்காது.

மிதுன ராசி

 

குருபகவான் உங்களுக்கு மங்களநாயகனாக மாறியுள்ளார். அனைத்து விதமான செல்வ செழிப்பையும் உங்களுக்கு கொடுப்பார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு உள்ளது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.