தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Luxurious Life: சொகுசில் மிதக்கும் ராசிகள்.. சுக்கிரன் காதல் விளையாட்டு ஆரம்பம்.. பணம் கொட்டுவது யாருக்கு?

luxurious life: சொகுசில் மிதக்கும் ராசிகள்.. சுக்கிரன் காதல் விளையாட்டு ஆரம்பம்.. பணம் கொட்டுவது யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 17, 2024 03:40 PM IST

luxurious life: சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் கடந்த ஜூன் 12-ம் தேதி அன்று மிதுன ராசிகள் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான ராசி ஆகும். சுக்கிரனின் மிதுன ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சொகுசில் மிதக்கும் ராசிகள்.. சுக்கிரன் காதல் விளையாட்டு ஆரம்பம்.. பணம் கொட்டுவது யாருக்கு?
சொகுசில் மிதக்கும் ராசிகள்.. சுக்கிரன் காதல் விளையாட்டு ஆரம்பம்.. பணம் கொட்டுவது யாருக்கு?

சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் கடந்த ஜூன் 12-ம் தேதி அன்று மிதுன ராசிகள் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான ராசி ஆகும். சுக்கிரனின் மிதுன ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு சொர்க்கவாசல் கிடைக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

சுக்கிரன் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு யோகம் கிடைக்கப்போகிறது காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். 

வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மிதுன ராசி

சுக்கிரன் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். 

சிந்தித்து செயல்பட்டால் உங்களுக்கு செலவுகள் குறையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். எதனால் உங்களுக்கு வாழ்க்கை துணையோடு சிறப்பான பலன்கள் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

புதிய முயற்சிகள் உங்களுக்கு மன சாந்தியை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். செல்வத்தில் எந்த குறையும் இருக்காது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு வெற்றியடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9