தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Aadi Month Rasipalan: ஆடி மாத ராசிபலன்.. யோகத்தில் நனைக்கும் சூரியன்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Aadi Month Rasipalan: ஆடி மாத ராசிபலன்.. யோகத்தில் நனைக்கும் சூரியன்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 08, 2024 09:33 AM IST

Aadi Month Rasipalan: சூரிய பகவானின் சஞ்சாரம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவருடைய கடக ராசி பயணம் ஆனது ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஆடி மாத ராசிபலன்.. யோகத்தில் நனைக்கும் சூரியன்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது
ஆடி மாத ராசிபலன்.. யோகத்தில் நனைக்கும் சூரியன்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Aadi Month Rasipalan: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் வழங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரிய பகவான் ராசி மாற்றம் அனைத்து விதமான ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சூரிய பகவானின் சஞ்சாரம் அனைத்து ராசிகளுக்கும் சாதகமான பலன்களை கொடுக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அது அனைவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நவகிரகங்களின் தலைவனாக திகழ்ந்து வரக்கூடிய சூரிய பகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார்.

சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் சூரிய பகவானின் சஞ்சாரம் இந்த ஆடி மாதத்தில் நிகழ உள்ளது. வருகின்ற ஜூலை 16ஆம் தேதி அன்று சந்திர பகவான் சொந்தமான ராசிக்கான கடக ராசியில் நுழைகின்றார். வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார்.

சூரிய பகவானின் சஞ்சாரம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவருடைய கடக ராசி பயணம் ஆனது ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். எல்லா துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணவரவிற்கு எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

விருச்சிக ராசி

சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

எடுத்துக்கொண்ட வாய்ப்புகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். வெளியூர் செல்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்ல லாபத்தை பெற்று தரும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மீன ராசி

சூரிய பகவான் உங்களுக்கு பொன்னான நாட்களாக அனைத்து நாட்களையும் மாற்றி கொடுக்கப் போகின்றார். பணவரவில் எந்த குறையும். இருக்காது. நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தந்தை வழியால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல லாபத்தை பெற்று தரும். நீங்கள் புதிய தொழில் செய்ய தொடங்கினால் அது உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். 

பலவிதமான ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9