Bad Luck Rasis: கஷ்டத்தில் கதறப்போகும் ராசிகள்.. சூரியன் விளையாட்டு ஆரம்பம்.. தப்பித்து ஓட வேண்டிய ராசிகள் நீங்களா?
Bad Luck Rasis: சூரிய பகவான் மற்றும் சுக்கிர பகவான் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Bad Luck Rasis: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் நவகிரகங்களில் இவர் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகிறார். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சூரிய பகவான் ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். அப்போது தமிழ் மாதம் பிறக்கின்றது.
இது போன்ற போட்டோக்கள்
Mar 23, 2025 12:54 PMமீன ராசியில் புதன் பகவானின் பிற்போக்கு நிலை.. திறமைகளை மேம்படுத்தி வெற்றி வாகை சூடும் ராசிகள்
Mar 23, 2025 12:25 PMமகாலட்சுமி யோகம் : திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் டும்டும்.. இந்த 3 ராசிக்கும் அதிர்ஷ்டம்.. பண பிரச்சனை இருக்காது!
Mar 23, 2025 07:00 AMகர்ம பலன்கள்: இந்த ராசிகள் கணக்கை பார்க்க தொடங்கி விட்டார் சனி.. கர்ம பலன்கள் தேடிவரும்.. யார் மீது குறி?
Mar 23, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : மகிழ்ச்சி தேடி வரும்.. அதிர்ஷ்டம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டிது யார்.. உங்க பலன் எப்படி இருக்கும்
Mar 22, 2025 07:15 PMசெவ்வாய் - சந்திரன் சேர்க்கை.. ஏப்ரலில் உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.. இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் தான்!
Mar 22, 2025 04:57 PMசைத்ரா நவராத்திரி 2025: அன்னை துர்கா தேவியின் அருள் யாருக்கு?.. எந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் பாருங்க..!
சூரிய பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சூரிய பகவான் கடந்த மே 14ஆம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றால் ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்.
சூரிய பகவான் மற்றும் சுக்கிர பகவான் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி
சூரிய பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். இந்த காலம் உங்களுக்கு மிகவும் கடுமையான காலமாக அமையும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைவதற்கு சற்று தாமதமாகும். நிதி ரீதியாக உங்களுக்கு பலவீனமான சூழ்நிலை ஏற்படும் பணத்தை சேமிப்பதற்கு தற்போது முடியாது. வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். தொழிலில் பெரிய முன்னேற்றம் இருக்காது. எதிரிகளால் சிக்கல்கள் அவ்வப்போது வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தின் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுன ராசி
உங்கள் ராசிகள் 12 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. திட்டமிட்டு நீங்கள் செலவுகளை செய்தாலும் பண விரயம் கட்டாயம் ஏற்படக்கூடிய சூழ்நிலை அமையும். நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. செலவுகளை கட்டுப்படுத்தினால் உங்களுக்கு மன ஆறுதல் ஏற்படும். கடினமாக உழைத்தாலும் உங்களுக்கு பெரிய முன்னேற்றம் இருக்காது. புதிய முதலீடுகளால் உங்களுக்கு நஷ்டங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும்.
கன்னி ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கப்படும். கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். புதிய முடிவுகளை தற்போது எடுப்பது நல்லது கிடையாது. பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியான முதலீடுகளில் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முடிந்தவரை முதலீடுகளை விட்டு தள்ளி இருப்பது நல்லது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
