Jackpot Lock: சூரியனில் விழுந்த புதன்.. அதிர்ஷ்டத்தில் குதித்த ராசிகள்.. இனி இவர்களை கையில் பிடிக்க முடியாது
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Jackpot Lock: சூரியனில் விழுந்த புதன்.. அதிர்ஷ்டத்தில் குதித்த ராசிகள்.. இனி இவர்களை கையில் பிடிக்க முடியாது

Jackpot Lock: சூரியனில் விழுந்த புதன்.. அதிர்ஷ்டத்தில் குதித்த ராசிகள்.. இனி இவர்களை கையில் பிடிக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 02, 2024 05:43 PM IST

Mercury: கிரகங்களின் ராஜாவாக திகழ்ந்துவரும் சூரிய பகவான் வரும் ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார். அதற்கு முன்பாகவே இளவரசனாக விளங்கும் புதன் பகவான். ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார்.

சூரியனில் விழுந்த புதன்.. அதிர்ஷ்டத்தில் குதித்த ராசிகள்.. இனி இவர்களை கையில் பிடிக்க முடியாது
சூரியனில் விழுந்த புதன்.. அதிர்ஷ்டத்தில் குதித்த ராசிகள்.. இனி இவர்களை கையில் பிடிக்க முடியாது

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் கல்வி, அறிவு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

கிரகங்களின் ராஜாவாக திகழ்ந்துவரும் சூரிய பகவான் வரும் ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார். அதற்கு முன்பாகவே இளவரசனாக விளங்கும் புதன் பகவான். ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார்.

இதன் காரணமாக சூரியன் மற்றும் புதன் சேர்க்கை மிதுன ராசியில் நிகழ உள்ளது. இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் ஆடம்பர வாழ்க்கை உங்களை தேடி வரும். நிறைவான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். நிதி ரீதியாக முன்னேற்றம் கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. 

சுய வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களுக்கு ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். மன உளைச்சல்கள் உங்களுக்கு நீங்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கை நிகழ்கின்ற காரணத்தினால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பல்வேறு கட்டங்களில் இருந்து உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட காலம் நிதி சிக்கல்கள் சமூகமாக நிறைவடையும். 

புதனின் செல்வாக்கு உங்களுக்கு நல்ல பேச்சாற்றலை கொடுக்கும். சூரியனின் ஆதிக்கம் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகப்படுத்தும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கை அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி சிக்கல்கள் நீண்ட காலமாக துன்புறுத்தி வந்தால் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். 

இந்த காலகட்டத்தில் வருமானம் உங்களுக்கு அதிகரிக்கும். விடாமுயற்சி நல்ல பலன்களை பெற்றுத் தரும் வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9