தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Rain: குடும்பத்தில் விளையாட்டை தொடங்கினார் புதன்.. ரிஷபத்தில் வேலை தொடங்கியது.. ஜூன் ஆட்டத்தில் சிக்கிய ராசிகள்

Money Rain: குடும்பத்தில் விளையாட்டை தொடங்கினார் புதன்.. ரிஷபத்தில் வேலை தொடங்கியது.. ஜூன் ஆட்டத்தில் சிக்கிய ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 29, 2024 10:00 AM IST

Mercury: புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ரிஷப ராசியில் நுழையப்போகும். புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றன.

குடும்பத்தில் விளையாட்டை தொடங்கினார் புதன்.. ரிஷபத்தில் வேலை தொடங்கியது.. ஜூன் ஆட்டத்தில் சிக்கிய ராசிகள்
குடும்பத்தில் விளையாட்டை தொடங்கினார் புதன்.. ரிஷபத்தில் வேலை தொடங்கியது.. ஜூன் ஆட்டத்தில் சிக்கிய ராசிகள்

மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் புதன் பகவான். இவர் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்.

புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ரிஷப ராசியில் நுழையப்போகும். புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான முன்னேற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும். 

வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பேச்சு திறமையால் காரியங்கள் முடிவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கும்ப ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்களில் இன்பங்கள் அதிகரிக்கும். தொழில் தொடர்பான முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். 

பெற்றோருடன் உங்களுக்கு உறவு பலமாகும். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மகர ராசி

உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பணமரம் இருக்கும். 

தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களுடன் உங்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்