தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs Where Lord Venus Will Face Problems In Life

சுக்கிரப் பெயர்ச்சி கஷ்டம்.. தப்பிக்க முடியாத அடி உறுதி.. சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 31, 2024 12:30 PM IST

Lord Venus: மார்ச் 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மீன ராசியில் நுழைகின்றார் இது குருபகவான் உடைய ராசியாகும். மீன ராசிகள் நுழையும் சுக்கிர பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சில கஷ்டமான சூழ்நிலையை சந்திக்க போகின்றனர்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அசுரர்களின் குருவாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான். 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் தற்போது கும்ப ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார்.

இது சனி பகவானுடைய சொந்த ராசியாகும். வரும் மார்ச் 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மீன ராசியில் நுழைகின்றார் இது குருபகவான் உடைய ராசியாகும். மீன ராசிகள் நுழையும் சுக்கிர பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சில கஷ்டமான சூழ்நிலையை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகிறார். இதனால் உங்களுக்கு வாழ்வில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நெருக்கமான உறவால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

துலாம் ராசி

 

உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்களால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பிரச்சனைகள் உங்களை தானாக தேடி வரும். வீண் செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. உங்கள் மீது வீண்பழி விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எத்தனை பிரச்சனை வந்தாலும் நீங்கள் அதனை விட்டு விலகி இருப்பது நல்லது. பொறுமையாக இருந்தால் முன்னேற்றம் அடையலாம். கடின உழைப்பு உங்களுக்கு சில நேரங்களில் பலன்களை தராது. பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். பல புதிய முகங்களை நீங்கள் நம்பாமல் இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel