பணத்தால் சுத்தி சுத்தி அடிக்க போகும் சுக்கிரன்.. அரியணை ஏறப் போகும் ராசிகள்.. ஜாக்பாட் இவர்களுக்கு தான்-here we will see the zodiac signs where lord venus money jackpot gets wet in rain - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பணத்தால் சுத்தி சுத்தி அடிக்க போகும் சுக்கிரன்.. அரியணை ஏறப் போகும் ராசிகள்.. ஜாக்பாட் இவர்களுக்கு தான்

பணத்தால் சுத்தி சுத்தி அடிக்க போகும் சுக்கிரன்.. அரியணை ஏறப் போகும் ராசிகள்.. ஜாக்பாட் இவர்களுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 27, 2024 05:06 PM IST

Jackpot: சுக்கிரன் தொடர்ந்து 10 நாட்கள் அஸ்வினி நட்சத்திரத்தில் சித்திரன் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிரன்
சுக்கிரன்

அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரும் சுக்கிரன் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளிலும் ஈடுபடுவார். அந்த வகையில் இந்த ஏப்ரல் மாத இறுதியில் அதாவது ஏப்ரல் 25ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் நுழைந்தார். வரும் மே மாதம் ஐந்தாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.

சுக்கிரன் தொடர்ந்து 10 நாட்கள் அஸ்வினி நட்சத்திரத்தில் சித்திரன் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உங்கள் ஆளுமை திறனால் முன்னேற்றம் உண்டாகும். நிதி ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

மிதுன ராசி

 

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொடர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இது நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

கன்னி ராசி

 

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. இவருடைய நட்சத்திர இடமாற்றத்தால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கப் போகின்றது. பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் வருமானத்தில் உயர்வு உண்டாகும். சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். நிதி ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து வருமானம் அதிகரிக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9