குரு நட்சத்திர பெயர்ச்சி.. வரும் ஏப்ரல் வரை சிக்கிக்கொண்ட 3 ராசிகள்.. மாடி வீடு யாருக்கு?
Lord Guru: குரு பகவான் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Guru: நவக்கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் குரு பகவான் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார்.
இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். குரு பகவான் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
ரிஷப ராசி
குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஐந்து மாத காலம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றார். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றி தேடி தரும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையா அதிகரிக்கும். வாழ்க்கையில் பெரிய உயரங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
கடக ராசி
குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு ஒன்பதாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும். அதிர்ஷ்ட தேவதையின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். புதிய முடிவுகள் உங்களுக்கு முன்னேற்றத்தைப் பற்றி தரும். பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
சிம்ம ராசி
குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குரு பகவான் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கக்கூடும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.