தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஓடி மறைந்தாலும் அடி உறுதி.. சிக்களின் உச்சத்தில் சூரியன்.. கட்டாயம் சிதையும் ராசிகள்

ஓடி மறைந்தாலும் அடி உறுதி.. சிக்களின் உச்சத்தில் சூரியன்.. கட்டாயம் சிதையும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 21, 2024 02:56 PM IST

Lord Surya: சூரிய பகவான் கடந்த மே 14 ஆம் தேதியன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இவருடைய ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும்.

ஓடி மறைந்தாலும் அடி உறுதி.. சிக்களின் உச்சத்தில் சூரியன்.. கட்டாயம் சிதையும் ராசிகள்
ஓடி மறைந்தாலும் அடி உறுதி.. சிக்களின் உச்சத்தில் சூரியன்.. கட்டாயம் சிதையும் ராசிகள்

நவகிரகங்களின் ராஜாவாக திகழ்ந்துவரும் சூரிய பகவான் ஒரு ராசியில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சூரிய பகவான் கடந்த மே 14 ஆம் தேதியன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இவருடைய ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரு மாத காலம் உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும். பணம் சம்பாதிக்கக்கூடிய வழிகளில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிதி நிலைமையில் பலவீனமான சூழ்நிலை உண்டாகும். பணம் சேமிப்பதில் தற்போது சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நிதி நிலைமையில் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலை உருவாகும். திட்டமிட்டபடி செலவுகள் அதிகரிக்க கூடும். பணக்கஷ்டத்தால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு அதிகப்படியான செலவுகள் ஏற்படக்கூடும். செலவுகளை கட்டுப்படுத்தினால் உங்களுக்கு சிக்கல்கள் குறையும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. தொழிலில் மந்தமான சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தில் சிக்கனமான சூழ்நிலை இருக்கும். எனவே நீங்கள் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்கு நீங்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க கூடும். மிதி ரீதியாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை புதிய முதலீடுகளை நீங்கள் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத நேரத்தில் நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும் எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் ஒரு மாத காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களது கவனக்குறைவால் பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களுக்கும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel