வக்ரத்தில் அடி.. புதன் புரட்ட போகிறார்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிக்கவே முடியாது
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வக்ரத்தில் அடி.. புதன் புரட்ட போகிறார்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிக்கவே முடியாது

வக்ரத்தில் அடி.. புதன் புரட்ட போகிறார்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிக்கவே முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 03, 2024 02:50 PM IST

Mercury Transit: புதன் பகவான் ஏப்ரல் இரண்டாம் தேதி என்று மேஷ ராசியில் வக்ரமடைய உள்ளார். புதன் பகவான் வக்ரமடைகின்ற காரணத்தினால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சித்தர்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

புதன் பகவான்
புதன் பகவான்

இது போன்ற போட்டோக்கள்

இவர் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் கடந்த மார்ச் 26 ஆம் தேதியன்று மேஷ ராசியில் நுழைந்தார். தற்போது இந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

புதன் பகவான் ஏப்ரல் இரண்டாம் தேதி என்று மேஷ ராசியில் வக்ரமடைய உள்ளார். புதன் பகவான் வக்ரமடைகின்ற காரணத்தினால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சித்தர்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தற்போது புதன் பகவானால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

மேஷ ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் வக்கிரமடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் பொறுமையாக இருந்தால் நன்மைகள் உண்டாகும். ஒரு முறைக்கு நான்கு முறை எந்த செயலாக இருந்தாலும் யோசித்து செயல்படுவது நல்லது. நிதி நிலைமையில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் 12 வது வீட்டில் புதன் வக்ரமடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எந்த செயலை எடுத்தாலும் பொறுமையாக இருப்பது நல்லது. நிறைய சவால்களின் நீங்கள் சந்திக்க நேரிடும். இது ரீதியாக கவனமாக இருக்க வேண்டும். பெரிய செலவுகள் உங்களைத் தேடி வரக்கூடிய சூழ்நிலை உண்டாகும். எந்த செலவாக இருந்தாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தவறான புரிதல்களால் சிக்கல்கள் ஏற்பட குடும்பத்தில் அதிக வாய்ப்பு உள்ளது.

கடக ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் புதன் பக்ரமடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடினமாக உழைத்தாலும் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்காது. பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டால் வரும் காலங்களில் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9