தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs That Will Suffer Due To Mercury Transit

மேஷத்தில் மாட்டிக் கொண்ட ராசிகள்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. வக்ரத்தால் வந்த சோதனை.. தப்பிக்கவே முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 28, 2024 01:59 PM IST

Lord Mercury: புதன் பகவான் மார்ச் 26 ஆம் தேதியன்று மேஷ ராசிக்குள் நுழைந்தார். வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி என்று மேஷ ராசியில் வக்ரமாகிறார். புதன் பகவானின் வக்ர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிரமப்படக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

புதன் பகவான் மார்ச் 26 ஆம் தேதியன்று மேஷ ராசிக்குள் நுழைந்தார். வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி என்று மேஷ ராசியில் வக்ரமாகிறார். புதன் பகவானின் வக்ர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிரமப்படக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்

மேஷ ராசி

 

புதன் பகவான் உங்கள் முதல் வீட்டில் வக்ரமாகிய காரணத்தினால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த வேலையை தொடங்கினாலும் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அனைத்து விஷயங்களிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது எந்த வேலையை செய்து முடித்தாலும் ஒரு முறைக்கு நான்கு முறை அதனை சரி பார்த்துக் கொள்வது நல்லது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் 12 வது வீட்டில் புதன் வக்ரமடைகிறார். இதனால் உங்களுக்கு செய்யும் வேலையில் தடங்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மிகவும் பொறுமையாக இருந்தால் வெற்றி கிடைக்கும் அதிக சவால்களை நீங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திடீரென்று பெரிய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. செலவுகளை குறைத்துக் கொண்டால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். ஒரு முறைக்கு நான்கு முறை புதிய செயல்கள் செய்யும்போது சிந்தித்து கொள்வது நல்லது. தவறான புரிதல்களால் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கடக ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் புதன் வக்ரமடைந்துள்ளார். உங்களுக்கு வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பொறுமையாக இருந்தால் வேலைகள் அனைத்தும் முடிவடையும். அதிக சவால்கள் உங்களுக்கு வரக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கடின உழைப்பு கொடுத்தாலும் உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்காது. வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வருமானம் சற்று குறைய அதிக வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel