தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: பண விளையாட்டில் சேர்த்துக்கொண்ட புதன்.. இந்த ராசிகளுக்கு யோகம்தான்.. அதிர்ஷ்டம் தேடி வருகின்றது

Money Luck: பண விளையாட்டில் சேர்த்துக்கொண்ட புதன்.. இந்த ராசிகளுக்கு யோகம்தான்.. அதிர்ஷ்டம் தேடி வருகின்றது

Suriyakumar Jayabalan HT Tamil
May 31, 2024 10:38 AM IST

Lord Mercury: புதன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது.

பண விளையாட்டில் சேர்த்துக்கொண்ட புதன்.. இந்த ராசிகளுக்கு யோகம்தான்.. அதிர்ஷ்டம் தேடி வருகின்றது
பண விளையாட்டில் சேர்த்துக்கொண்ட புதன்.. இந்த ராசிகளுக்கு யோகம்தான்.. அதிர்ஷ்டம் தேடி வருகின்றது

புதன் பகவான் ஒரு ராசியில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு புத்திசாலித்தனத்தில் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது மேஷ ராசிகள் பயணம் செய்து வரும் புதன் பகவான் வருகின்ற மே 31ம் தேதி என்று ரிஷப ராசிக்கு செல்கிறார். ரிஷப ராசியானது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்.

புதன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

புதன் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் பல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் பேச்சு திறமையால் காரியங்கள் வெற்றி அடையும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

மகர ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். குழந்தைகளுக்கான முன்னேற்றம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணை முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணவரவில் இருந்து குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel