பண மூட்டைகளை அள்ளிக் கொடுக்க போகும் புதன்.. கோடீஸ்வர யோக ராசிகள்.. குடும்பத்தில் மகிழ்ச்சி
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பண மூட்டைகளை அள்ளிக் கொடுக்க போகும் புதன்.. கோடீஸ்வர யோக ராசிகள்.. குடும்பத்தில் மகிழ்ச்சி

பண மூட்டைகளை அள்ளிக் கொடுக்க போகும் புதன்.. கோடீஸ்வர யோக ராசிகள்.. குடும்பத்தில் மகிழ்ச்சி

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 30, 2025 04:04 PM IST

புதன் பகவானின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

பண மூட்டைகளை அள்ளிக் கொடுக்க போகும் புதன்.. கோடீஸ்வர யோக ராசிகள்.. குடும்பத்தில் மகிழ்ச்சி
பண மூட்டைகளை அள்ளிக் கொடுக்க போகும் புதன்.. கோடீஸ்வர யோக ராசிகள்.. குடும்பத்தில் மகிழ்ச்சி

இது போன்ற போட்டோக்கள்

புதன் பகவான் படிப்பு, பேச்சு, திறமை, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து விடுகின்றார். அந்த வகையில் புதன் பகவான் வருகின்ற மே மாதம் ஏழாம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். புதன் பகவானின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

புதன் பகவானின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

துலாம் ராசி

புதன் பகவானின் மேஷ ராசி பயணம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. வீடு மற்றும் குடும்பம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் மதிப்பிற்கும் என கூறப்படுகிறது. பணம் யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

புதன் பகவானால் உங்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் இந்த மாற்றம் நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கான அனைத்து முயற்சிகளும் வெற்றியாக அமையும் என கூறப்படுகிறது. வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது பணவரவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

புதன் பகவானின் மேஷ ராசி பயணம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் 11-வது வீட்டில் இந்த யோகம் நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. பணம் மற்றும் கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner