தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Venus 2024: ஜாலியான வாழ்க்கை தரும்.. சுக்கிரன் பணத்தில் மிதக்கும் ராசிகள்.. தொடங்கிவிட்டது யோகம்..!

Lord Venus 2024: ஜாலியான வாழ்க்கை தரும்.. சுக்கிரன் பணத்தில் மிதக்கும் ராசிகள்.. தொடங்கிவிட்டது யோகம்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 04, 2024 05:42 PM IST

Lord Venus: சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தில் அமர்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம் .

ஜாலியான வாழ்க்கை தரும்.. சுக்கிரன் பணத்தில் மிதக்கும் ராசிகள்.. தொடங்கிவிட்டது யோகம்..!
ஜாலியான வாழ்க்கை தரும்.. சுக்கிரன் பணத்தில் மிதக்கும் ராசிகள்.. தொடங்கிவிட்டது யோகம்..!

இவர் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சுக்கிர பகவான் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சென்றார். அதற்கு பிறகு மே 19ஆம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். ரிஷப ராசி இவருடைய சொந்தமான ராசியாகும்.

சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தில் அமர்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம் .

மேஷ ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். ஆனால் உங்களுக்கு பல்வேறு விதமான வகையில் இருந்து அற்புதமான பலன்களை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல், திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். அனைத்திற்கும் ஆன வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல வெற்றியை பெற்று தரும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். திருமணம் செய்து கொண்டு சென்ற அவர்களது வீட்டாருடன் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். காதல் திருமணத்தில் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

கடக ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நல்ல செய்தி தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். குடும்ப சூழலில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel