சனி கட்டம் கட்டி விட்டார்.. பறப்பது உறுதி.. பண மூட்டை விழப் போகின்றது.. யோக ராசிகள்
Lord Saturn: சனி பகவான் ஜூன் 30-ம் தேதி அன்று வக்கிர நிலை அடைகிறார். 139 நாட்கள் இதே நிலையில் சனி பகவான் பயணம் செய்கிறார். சனி பகவானின் இந்த வக்ர இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சிறப்பான பலன்களை பெற போகின்றனர்.
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனிபகவான். ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு நன்மை மற்றும் தீமைகள் என அனைத்தையும் செய்யக்கூடியவர். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும்.
அந்த வகையில் சனி பகவான் ஜூன் 30-ம் தேதி அன்று வக்கிர நிலை அடைகிறார். 139 நாட்கள் இதே நிலையில் சனி பகவான் பயணம் செய்கிறார். சனி பகவானின் இந்த வக்ர இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சிறப்பான பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கன்னி ராசி
சனி பகவானின் வக்ர இடமாற்றம் உங்களுக்கு அபரிமிதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வருமானம் அதிகரிக்கப்படும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது நிதின் நிலை முன்னேற்றம் ஏற்படும்.
துலாம் ராசி
சனி பகவானின் இடமாற்றம் உங்களுக்கு பெரிய அளவில் மாற்றத்தை கொடுக்கப் போகின்றது. கைவிட்டு போன செல்வங்கள் உங்களை தேடி வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையின் சிக்கல்கள் குறைந்து முன்னேற்றம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் மகத்தான வெற்றி உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
மீன ராசி
சனிபகவானின் வக்ர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை தரம் அதிகரிக்க போகின்றது. நீண்ட நாட்களாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வெற்றி கிடைக்கும். வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்டு வந்த மந்தமான சூழ்நிலை குறைந்து லாபம் அதிகரிக்கும். பண வரவு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9