2025 வரை சனி விடமாட்டார்.. சச ராஜயோகம் உருவானது.. பண மழையில் சிக்கிக் கொண்ட 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?-here we will see the zodiac signs that will get wet in the rain of money from lord saturn - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  2025 வரை சனி விடமாட்டார்.. சச ராஜயோகம் உருவானது.. பண மழையில் சிக்கிக் கொண்ட 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

2025 வரை சனி விடமாட்டார்.. சச ராஜயோகம் உருவானது.. பண மழையில் சிக்கிக் கொண்ட 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
May 02, 2024 04:36 PM IST

lord Saturn: சனிபகவான் மூலத்திரிகோண ராசியான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சச ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் இது மங்களகரமான ராஜயோகமாக கருதப்படுகிறது.

சச ராஜயோகம்
சச ராஜயோகம்

நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். நன்மைகள், தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார் அடுத்த ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

சனிபகவான் மூலத்திரிகோண ராசியான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சச ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் இது மங்களகரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு வரை இந்த அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராஜ ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சச யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகர ராசி

 

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சச ராஜயோகம் உருவாகி உள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் இடைவிடாமல் கிடைக்கப் போகின்றது. தனிப்பட்ட வேளையில் வெற்றிகள் கிடைக்கும். செல்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் சச யோகம் முதல் வீட்டில் உருவாக்கி உள்ளது. இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் அதிர்ஷ்டத்தை தேடி தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9