Guru 2024: குருவால் அரசனாக்கப் போகும் ராசிகள்
குரு பகவானால் இந்த ஆண்டு சிறப்பான பலன்களை பெறப்போகின்ற ராசிகள் இங்கே காண்போம்.
நவகிரகங்களில் குரு பகவான் தேவ குருவாக விளக்கி வருகிறார். சுப கிரகமாக விளங்கிவரும் குரு பகவான் எப்போதும் நன்மைகளை செய்யக்கூடியவர். நவகிரகங்களில் குரு பகவான் அதிகபட்சமாக துன்பங்களை கொடுப்பது கிடையாது.
ஒருவேளை குருபகவானின் இடமாற்றத்தால் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் மேஷ ராசியில் நேரான பயணத்தை மேற்கொண்டு வரும் குரு பகவான் வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இடமாற்றம் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது என்பது குறித்து இங்கே காணலாம்.
மேஷ ராசி
குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு காரியமும் நீங்கள் நினைத்தவாறு சுபமாக முடிவடைய வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் முன்பு இருந்ததைவிட நல்ல பலன்கள் கிடைக்கும். செல்வத்தில் புதிய வழிகள் திறக்கப்பட்டு வருவாய் அதிகரிக்கும் வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்கும். அனைத்து விதமான வசதிகளும் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னி ராசி
குருபகவானின் இடமாற்றம் இந்த புத்தாண்டில் உங்களுக்கு சிறப்பாக அமைய உள்ளது. வாழ்க்கையில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீக ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். சமூகத்தில் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. அதிக கவனம் செலுத்தி உழைத்தால் கண்டிப்பாக பலன்கள் கிடைக்கும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். கடன் சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.
சிம்ம ராசி
இந்த ஆண்டு உங்களுக்கு வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை குரு பகவான் கொடுப்பார். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். நன்மைகள் உங்களைத் தேடி வரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. வருமானத்திற்கான புதிய வழிகள் உங்களுக்கு திறக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் கைகூடும்.
மிதுன ராசி
குரு பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். யாருக்கும் தெரியாமல் உங்களுக்கு செல்வம் சேரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பு நல்ல பலனை பெற்று தரும். திடீரென எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9