தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ரத்தக்கண்ணீர் விடப்போகும் ராசிகள்.. செவ்வாய் புரட்டி எடுக்கப் போகிறார்.. தப்பிக்க முடியாது

ரத்தக்கண்ணீர் விடப்போகும் ராசிகள்.. செவ்வாய் புரட்டி எடுக்கப் போகிறார்.. தப்பிக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
May 10, 2024 04:21 PM IST

Lord Mars: கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். தற்போது அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார்.

ரத்தக்கண்ணீர் விடப்போகும் ராசிகள்.. செவ்வாய் புரட்டி எடுக்கப் போகிறார்
ரத்தக்கண்ணீர் விடப்போகும் ராசிகள்.. செவ்வாய் புரட்டி எடுக்கப் போகிறார்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களின் தலைமை சேனாதிபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்திருக்கின்றார்.

கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். தற்போது அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் உருவாக்கி உள்ளது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி ரீதியாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தின் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களோடு வாக்குவாதம் ஏற்படக்கூடும். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடன் வேலை செய்பவர்களுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய தொழில் தொடங்கினால் சற்று தாமதமாக செய்வது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் புதிய முடிவுகள் எடுக்கும் போது நன்கு யோசிக்க வேண்டும். உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மகர ராசி

 

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் வாழ்க்கையில் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்க கூடும். வசதிகள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிக உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை தற்போது தராது. வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படக்கூடும். தொழிலில் நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்ப உறுப்பினர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel