Lord Rahu: ராகு உச்சத்தில் விளையாடுகிறார்.. அதிர்ஷ்டத்தில் புரண்டு ஓடும் ராசிகள்.. மூச்சு முட்ட கொட்டும் பணம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Rahu: ராகு உச்சத்தில் விளையாடுகிறார்.. அதிர்ஷ்டத்தில் புரண்டு ஓடும் ராசிகள்.. மூச்சு முட்ட கொட்டும் பணம்

Lord Rahu: ராகு உச்சத்தில் விளையாடுகிறார்.. அதிர்ஷ்டத்தில் புரண்டு ஓடும் ராசிகள்.. மூச்சு முட்ட கொட்டும் பணம்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 04, 2024 05:32 PM IST

Lord Rahu: ராகு பகவான் வரும் ஜூலை எட்டாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது.

ராகு உச்சத்தில் விளையாடுகிறார்.. அதிர்ஷ்டத்தில் புரண்டு ஓடும் ராசிகள்.. மூச்சு முட்ட கொட்டும் பணம்
ராகு உச்சத்தில் விளையாடுகிறார்.. அதிர்ஷ்டத்தில் புரண்டு ஓடும் ராசிகள்.. மூச்சு முட்ட கொட்டும் பணம்

இது போன்ற போட்டோக்கள்

ராகு கேது எப்போதும் இணைபிரியாத கிரகங்களாக விளங்கி வருகின்றனர். வெவ்வேறு ராசியில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ராகு பகவான் வரும் ஜூலை எட்டாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல யோகத்தை தரும். வருமானத்தில் முன்னேற்றத்தை தரக்கூடிய ஆதாரங்கள் அதிகரிக்கப்படும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் யோகம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்க உள்ளது.

துலாம் ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு திடீர் பணவரவு அதிகப்படுத்தும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் யோகம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் தொழிலில் புதிய நன்மைகள் உண்டாகும். ராகுபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிக ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9