Sani Attack: சனி தலைகீழாக மாற்றப் போகிறார்.. வக்கிர பெயர்ச்சியில் பணமூட்டை.. யோக ராசிகள் நீங்க உண்டா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Attack: சனி தலைகீழாக மாற்றப் போகிறார்.. வக்கிர பெயர்ச்சியில் பணமூட்டை.. யோக ராசிகள் நீங்க உண்டா?

Sani Attack: சனி தலைகீழாக மாற்றப் போகிறார்.. வக்கிர பெயர்ச்சியில் பணமூட்டை.. யோக ராசிகள் நீங்க உண்டா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 23, 2024 05:29 PM IST

Lord Sani: சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று சனி பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

சனி தலைகீழாக மாற்றப் போகிறார்.. வக்கிர பெயர்ச்சியில் பணமூட்டை.. யோக ராசிகள் நீங்க உண்டா?
சனி தலைகீழாக மாற்றப் போகிறார்.. வக்கிர பெயர்ச்சியில் பணமூட்டை.. யோக ராசிகள் நீங்க உண்டா?

இது போன்ற போட்டோக்கள்

சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். தற்போது சனி பகவான் கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று சனி பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் முழு யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

சனிபகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் உங்களுக்கு அபரிமிதமான செல்வத்தை கொடுக்கப் போகின்றது. பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு பண வரவு இருக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். குழந்தைகள் மூலம் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் அற்புதமான பலன்களை சனி வக்கிர பெயர்ச்சி நிகழ்த்தப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். அற்புதமான பலன்கள் உங்களைத் தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து பணவரவு அதிகரிக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

சிம்ம ராசி

சனி வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு பல நல்ல செய்திகளை தேடி வந்து கொடுக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து சுமூகமான சூழ்நிலை அமையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் குறையும். வணிகத்தின் மூலம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பண வரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9