தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  உதித்தால் கொட்டும் அதிர்ஷ்டம்.. சுக்கிரன் மிதுன ராசியில் சம்பவம்.. சிக்கிய ராசிகள் யார்?

உதித்தால் கொட்டும் அதிர்ஷ்டம்.. சுக்கிரன் மிதுன ராசியில் சம்பவம்.. சிக்கிய ராசிகள் யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 29, 2024 11:01 AM IST

Lord Venus: சுக்கிர பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

உதித்தால் கொட்டும் அதிர்ஷ்டம்.. சுக்கிரன் மிதுன ராசியில் சம்பவம்.. சிக்கிய ராசிகள் யார்?
உதித்தால் கொட்டும் அதிர்ஷ்டம்.. சுக்கிரன் மிதுன ராசியில் சம்பவம்.. சிக்கிய ராசிகள் யார்?

Lord Venus: ஆடம்பரத்தின் அதிபதியாக சுக்கிரன் விளங்கி வருகின்றார். நவக்கிரகங்களில் இவர் ஆடம்பர கிரகமாக விளங்கி வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும். என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிரன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார்.

சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். தற்போது மிதுன ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிர பகவான் அஸ்தமன நிலையில் இருந்து வருகிறார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார்.