Money Luck: புதன் நட்சத்திர பெயர்ச்சி.. ஆகஸ்ட் மாத வெற்றிகளை அனுபவிக்கும் ராசிகள்.. நீங்க என்ன ராசி
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: புதன் நட்சத்திர பெயர்ச்சி.. ஆகஸ்ட் மாத வெற்றிகளை அனுபவிக்கும் ராசிகள்.. நீங்க என்ன ராசி

Money Luck: புதன் நட்சத்திர பெயர்ச்சி.. ஆகஸ்ட் மாத வெற்றிகளை அனுபவிக்கும் ராசிகள்.. நீங்க என்ன ராசி

Suriyakumar Jayabalan HT Tamil
Updated Jul 25, 2024 12:39 PM IST

Money Luck: புதன் பகவானின் மகம் நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

புதன் நட்சத்திர பெயர்ச்சி.. ஆகஸ்ட் மாத வெற்றிகளை அனுபவிக்கும் ராசிகள்.. நீங்க என்ன ராசி
புதன் நட்சத்திர பெயர்ச்சி.. ஆகஸ்ட் மாத வெற்றிகளை அனுபவிக்கும் ராசிகள்.. நீங்க என்ன ராசி

இது போன்ற போட்டோக்கள்

புதன் பகவான் கடந்த ஜூலை 19ஆம் தேதி அன்று கேது பகவானின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் நுழைந்தார். இந்த நட்சத்திரத்தில் வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை புதன் பகவான் பயணம் செய்வார். இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

புதன் பகவானின் மகம் நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் புதன் பகவானின் நட்சத்திர பயணம் ஆனது அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவடையும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

உயர் அலுவலர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக் கொடுப்பார்கள். நீண்ட நாட்களாக உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். தொழில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.

சிம்ம ராசி

புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றமானது உங்களுக்காக அதிர்ஷ்டமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அனைத்தையும் கொடுப்பார். புதன் பகவான் வேலையை மாற்ற நினைத்தால் அதற்கு ஏற்ற நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். 

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். பல வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். வாழ்க்கை துணையோடு உங்களுக்கு நேரத்தை செலவிடக் கூடிய சூழ்நிலைகள் அனைத்தும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

தனுசு ராசி

புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுத்து வருகிறது இதனால் உங்களுக்காக தேடி வரும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். லாபத்தை ஈட்டக் கூடிய வழிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

கடின முயற்சி உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக மிக அதிர்ஷ்டசாலியாக மாறப்போகிறீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9