தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி பண முட்டையோடு பறக்க ஆரம்பித்து விட்டார்.. இந்த ராசிகளுக்கு கூரைய பிச்சிகிட்டு கொட்ட போகுது.. 3 ராசிகள் பறப்பது உறுதி

சனி பண முட்டையோடு பறக்க ஆரம்பித்து விட்டார்.. இந்த ராசிகளுக்கு கூரைய பிச்சிகிட்டு கொட்ட போகுது.. 3 ராசிகள் பறப்பது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
May 03, 2024 02:11 PM IST

Lord Saturn: 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. கும்ப ராசியில் செய்து வரும் சனி பகவானால் சச யோகம் உருவாகி உள்ளது. இது மகா யோகங்களில் ஒன்றாகும்.

 சச யோகம்
சச யோகம்

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இதன் காரணமாக சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நன்மை மற்றும் தீமைகள் என அனைத்தையும் பாரபட்சமில்லாமல் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.

2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. கும்ப ராசியில் செய்து வரும் சனி பகவானால் சச யோகம் உருவாகி உள்ளது. இது மகா யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சச யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு பணம் கொட்டப் போகின்றது. சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மகர ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சச யோகம் உருவாக்கியது. இதனால் உங்களுக்கு புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஏழரை சனியின் கடைசி கட்டம் என்கின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வர போகின்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். செல்வம் மற்றும் வருமானம் அதிகரிக்கப்படும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வேலை செய்யும் இடத்தில் அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஜாதகமாக செயல்படுவார்கள்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சக யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நடுவிலிருந்து நீதிமன்ற வழக்குகள் வெற்றியாக முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel