July Lucky Rasis: ஜூலையில் குபேரனாக மாறும் ராசிகள்.. ஒன்று சேரும் கிரகங்கள்.. இந்த ராசிகள் உச்சம்தான்
July 2024: கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு புதன் பகவான் செல்கிறார். இந்த ஜூலை மாதத்தில் இத்தனை இடமாற்றங்கள் ஏற்படுகின்றன. பல கிரகங்கள் ஒன்று சேர்கின்றனர். இதனால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

July month: நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த வகையில் நவகிரகங்கள் இடத்தை மாற்றும் பொழுது குறிப்பிட்ட கால இடைவெளியை எடுத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். கிரகங்களின் மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். அந்த வகையில் வருகின்ற ஜூலை மாதம் நான்காம் தேதி கிரகங்களின் நிலைகள் மாற்றம் ஏற்பட உள்ளன.
இது போன்ற போட்டோக்கள்
Apr 19, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : 19 ஏப்ரல் 2025 மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 18, 2025 01:26 PM'வியாபாரத்தில் நஷ்டம், வாழ்க்கைத்துணையுடன் மோதலுக்கு வாய்ப்பு': ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 18, 2025 01:20 PMராகு பெயர்ச்சி பலன்கள்: பணமழை கொட்டும் ராகு.. அதிர்ஷ்டமான ராசிகள்.. கும்பத்தில் யோகம் பிறக்குது!
Apr 18, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியினரே.. ஏப்ரல் 18, 2025 ல் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 17, 2025 05:29 PMராகு பெயர்ச்சி பலன்கள்: பண மழை கொடுத்து தூக்க வரும் ராகு.. கோடிகளில் நனையும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா சொல்லுங்க?
Apr 17, 2025 05:01 PMநாளைய ராசிபலன்: வருமானம் அதிகரிக்கும், தன்னம்பிக்கை நிறைந்திருக்கும்.. இந்த ராசிகளுக்கு நாளை எப்படி இருக்கும்?
செல்வத்தை அள்ளிக் கொடுக்கக்கூடிய சுக்கிர பகவான் சந்திர பகவானின் கடக ராசிக்குள் நுழைகின்றார். அப்போது புதன் பகவானோடு அவர் இணைகின்றார். அதற்குப் பிறகு தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே குருபகவான் அந்த ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். குரு செவ்வாய் இருவரும் ரிஷப ராசியில் செய்கின்றனர். அதற்குப் பிறகு சூரிய பகவான் கடக ராசிக்குள் நுழைகிறார்.
அதற்குப் பிறகு கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு புதன் பகவான் செல்கிறார். இந்த ஜூலை மாதத்தில் இத்தனை இடமாற்றங்கள் ஏற்படுகின்றன. பல கிரகங்கள் ஒன்று சேர்கின்றனர். இதனால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
ஜூலை மாதம் உங்களுக்கு மிகவும் அற்புதமான மாதமாக இருக்கப் போகின்றது. பரபரப்பில் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய நபர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
சிம்ம ராசி
இந்த ஜூலை மாதம் உங்களுக்கு சிறப்பான அதிர்ஷ்ட மாதமாக அமையப்போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். கூட்டுத்தொழில் முயற்சிகள் வெற்றி தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நட்பு வட்டாரங்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
மகர ராசி
ஜூலை மாதம் உங்களுக்கு பெரிய பொக்கிஷத்தை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். எடுத்துக் கொண்ட காரியங்கள் உங்களுக்கு வெற்றியாக அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் மண்டல காரியங்கள் நடக்க உள்ளது. திட்டமிட்ட காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும்.
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பணவரவில் எந்த குறையும் இருக்காது. இது நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
