Lord Sukra: பண விளையாட்டு ஆரம்பம்.. சுக்கிரனால் சிரிக்க போக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் இந்த ராசிக்கு வருது
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sukra: பண விளையாட்டு ஆரம்பம்.. சுக்கிரனால் சிரிக்க போக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் இந்த ராசிக்கு வருது

Lord Sukra: பண விளையாட்டு ஆரம்பம்.. சுக்கிரனால் சிரிக்க போக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் இந்த ராசிக்கு வருது

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 29, 2024 04:11 PM IST

Lord Venus: சுக்கிரன் அதற்குப் பிறகு மே மாதத்தில் 19ஆம் தேதி அன்று தனது சொந்த ராசிக்கான ரிஷப ராசியில் நுழைந்தார். இது இவருடைய சொந்தமான ராசியாகும். சுக்கிர பகவானின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினால் குறிப்பிட்ட சிலர் ராசிகளுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது.

பண விளையாட்டு ஆரம்பம்.. சுக்கிரனால் சிரிக்க போக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் இந்த ராசிக்கு வருது
பண விளையாட்டு ஆரம்பம்.. சுக்கிரனால் சிரிக்க போக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் இந்த ராசிக்கு வருது

இது போன்ற போட்டோக்கள்

சுக்கிர பகவான் முப்பது நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும். இந்நிலையில் சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசியின் நுழைந்தார்.

சுக்கிரன் அதற்குப் பிறகு மே மாதத்தில் 19ஆம் தேதி அன்று தனது சொந்த ராசிக்கான ரிஷப ராசியில் நுழைந்தார். இது இவருடைய சொந்தமான ராசியாகும். சுக்கிர பகவானின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினால் குறிப்பிட்ட சிலர் ராசிகளுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசிகள் சுக்கிரன் முதல் வீட்டில் பயணம் செய்த வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் திருமணம் செய்ய நினைத்தால் உங்களுக்கு ஆசைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் வியாபாரம் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் இருந்த துறையும் இருக்காது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், புதுமனை தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

சக ஊழியர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பேசும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காதல் திருமணம் உங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் பெற்று தரும். மகிழ்ச்சி உங்களுடன் எப்போதும் நிலையாக இருக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வேண்டி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9