தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs That Will Be Placed In Fortune Due To Mercury Rising

உதித்துவிட்டார் புதன்.. அதிர்ஷ்ட மழை உறுதி.. பணவரவில் மகிழ்ச்சியாக போகும் ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 15, 2024 10:41 AM IST

Mercury Rising: புதன் பகவான் அஸ்தமன நிலையில் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். மார்ச் 15ஆம் தேதி அதாவது இன்று மீன ராசியில் உதயம் ஆகின்றார். புதன் பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

புதன் பகவான் அஸ்தமன நிலையில் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். மார்ச் 15ஆம் தேதி அதாவது இன்று மீன ராசியில் உதயம் ஆகின்றார். புதன் பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

புதன் பகவான் உதயம் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது. மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வேலைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

ரிஷப ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்த போகின்றது. புத்திசாலித்தனம் அதிகமாகி பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அனைத்து விதமான சிக்கல்களுக்கும் நிவாரணம் இப்போது உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு வாழ்வில் உயர்வை தரப் போகின்றது. மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

துலாம் ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகப்படுத்த போகின்றது. புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களால் பாராட்டுகள் கிடைக்கும். தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel