தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru: குற்றாலம் போல் பணம் கொட்டும் ராசிகள்.. குரு நட்சத்திர அதிரடி.. 3 ராசிகளுக்கு பண மழை

Lord Guru: குற்றாலம் போல் பணம் கொட்டும் ராசிகள்.. குரு நட்சத்திர அதிரடி.. 3 ராசிகளுக்கு பண மழை

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 29, 2024 11:52 AM IST

Lord Guru: குரு பகவான் கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது ஒரு ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார்.

குற்றாலம் போல் பணம் கொட்டும் ராசிகள்.. குரு நட்சத்திர அதிரடி.. 3 ராசிகளுக்கு பண மழை
குற்றாலம் போல் பணம் கொட்டும் ராசிகள்.. குரு நட்சத்திர அதிரடி.. 3 ராசிகளுக்கு பண மழை

Lord Guru: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குருபகவான் மே ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குரு பகவான் கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது ஒரு ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். அப்படி அதிர்ஷ்டமாக இருக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

சிம்ம ராசி

உங்கள் ராசிகள் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் பல்வேறு விதமான சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் சொந்த வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் இருக்கும். நிதி ஆதாயங்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தேவையில்லாத அலைச்சல் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

துலாம் ராசி

குருபகவானின் நட்சத்திர இடம் மற்றும் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. அதிர்ஷ்டம் உங்களை தேடி வர போகின்றது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியத்தால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களோடு மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9