தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு பண மூட்டையை எடுத்து விட்டார்.. செவ்வாய் அள்ளி கொடுப்பார்.. வள்ளலாக மாறும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

குரு பண மூட்டையை எடுத்து விட்டார்.. செவ்வாய் அள்ளி கொடுப்பார்.. வள்ளலாக மாறும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 01, 2024 09:54 AM IST

Lord Guru Mars: நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வரும் செவ்வாய் பகவான் வருகின்ற ஜூலை மாதம் ரிஷப ராசிக்கு இடமாகிறார். இந்நிலையில் ஏற்கனவே ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு செவ்வாய் பகவான் இணைகிறார். குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பண மூட்டையை எடுத்து விட்டார்.. செவ்வாய் அள்ளி கொடுப்பார்.. வள்ளலாக மாறும் ராசிகள்.. உங்க ராசி என்ன?
குரு பண மூட்டையை எடுத்து விட்டார்.. செவ்வாய் அள்ளி கொடுப்பார்.. வள்ளலாக மாறும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, யோகம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் தற்போது தனது சொந்தமான ராசிக்கான மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வரும் செவ்வாய் பகவான் வருகின்ற ஜூலை மாதம் ரிஷப ராசிக்கு இடமாகிறார். இந்நிலையில் ஏற்கனவே ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு செவ்வாய் பகவான் இணைகிறார். 

குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இரண்டு கிரகங்களின் ரிஷப ராசி பயணம் ஆனது ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க உள்ளது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் எதிர்பாராத நேரத்தில் மீது ஆதாயங்கள் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வருமானத்திற்கு எந்த குறையும். இருக்காது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கும். சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் வேலை மற்றும் தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சிலருக்கு விரும்பிய இடம் மாற்றும் வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9