தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Yogam: ஆரோக்கியத்தை அள்ளி வீசும் சுக்கிரன்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள்.. பணமழை கொட்ட போகுது

Money Yogam: ஆரோக்கியத்தை அள்ளி வீசும் சுக்கிரன்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள்.. பணமழை கொட்ட போகுது

Suriyakumar Jayabalan HT Tamil
May 23, 2024 03:48 PM IST

Lord Venus: சுக்கிரனின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

ஆரோக்கியத்தை அள்ளி வீசும் சுக்கிரன்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள்.. பணமழை கொட்ட போகுது
ஆரோக்கியத்தை அள்ளி வீசும் சுக்கிரன்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள்.. பணமழை கொட்ட போகுது

சுக்கிரனின் ஒவ்வொரு இடமாற்றமும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஏப்ரல் 24ஆம் தேதி இன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசியில் நுழைந்தார். மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்தார். அதற்கு பிறகு தனது சொந்த ராசியான ரிஷப ராசிகள் நுழைந்தார்.

சுக்கிரனின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

சுக்கிர பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. பணவரவில் இந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல லாபம் இருக்கும். குடும்பத்தில் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து லாபம் அதிகரிக்கும்.

மிதுன ராசி

சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டம் குறையாமல் உங்களைத் தேடி வரும். கை வைத்த காரியம் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். இதுவரை நிலுவையில் இருந்த பணம் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பார்கள் நண்பர்களால் உதவி கிடைக்கும்.

கடக ராசி

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். இந்த காலகட்டத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

சிம்ம ராசி

சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு முழுமையான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை மற்றும் தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து முன்னேற்றம் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்கள் பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel