தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru Venus: குரு சுக்கிரன் சேர்ந்து வெளுக்க போகும் ராசிகள்.. கன்னா பின்னா அடி உறுதி.. தப்பிச்சு ஓடுங்க!

Lord Guru Venus: குரு சுக்கிரன் சேர்ந்து வெளுக்க போகும் ராசிகள்.. கன்னா பின்னா அடி உறுதி.. தப்பிச்சு ஓடுங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
May 30, 2024 04:58 PM IST

Lord Guru Venus: தற்போது குரு மற்றும் சுக்கிரன் இருவரும் அஸ்தமன நிலையில் ஒரே ராசியில் பயணம் செய்து வருகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிரமத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு சுக்கிரன் சேர்ந்து வெளுக்க போகும் ராசிகள்.. கன்னா பின்னா அடி உறுதி.. தப்பிச்சு ஓடுங்க
குரு சுக்கிரன் சேர்ந்து வெளுக்க போகும் ராசிகள்.. கன்னா பின்னா அடி உறுதி.. தப்பிச்சு ஓடுங்க

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் ராசியில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் கடந்தமே ஏழாம் தேதி அன்று சுக்கிரன் ரிஷப ராசியில் நுழைந்தார். குருபகவான் ரிஷப ராசியில் அஸ்தமன நிலையில் இருந்து வருகிறார். சுக்கிர பகவானும் அஸ்தமன நிலையில் நுழைந்தார். தற்போது குரு மற்றும் சுக்கிரன் இருவரும் அஸ்தமன நிலையில் ஒரே ராசியில் பயணம் செய்து வருகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிரமத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

குரு மற்றும் சுக்கிரன் அஸ்தமன நிலையில் உங்கள் ராசியில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடின உழைப்பு உங்களுக்கு பிரதிபலன்களை கொடுக்காது. உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

உடன் வேலை செய்பவர்களோடு கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் லாபம் கிடைக்க சட்ட தாமதமாகும். அதிக செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணத்தை சேமிக்க முடியாமல் சிரமப்படுவீர்கள் மருத்துவ செலவுகள் அதிகம். ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் திருமண வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட கூடும்.

சிம்ம ராசி

குரு சுக்கிரன் அஸ்தமன நிலையில் பயணம் செய்வது உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கலை ஏற்படுத்தும். குழந்தைகளால் உங்களுக்கு கவலைகள் ஏற்படக்கூடும். வேலை தொடர்பான விஷயங்களில் பயணங்கள் அதிகமாக இருக்கும். உங்கள் இலக்குகளை அடைவதற்கு கடின உழைப்பு தேவைப்படும். 

வேலை செய்யும் இடத்தில் அந்த அளவிற்கு உங்களுக்கு திருப்தி இருக்காது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படக்கூடும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிக ராசி

குரு சுக்கிரன் அஸ்தமன நிலையில் இருப்பதால் உங்களுக்கு இந்த காலம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. சிறு வேலைகள் கூட செய்து முடிப்பதற்கு மிகவும் தாமதமாகவும் வியாபாரத்தில் பெரிய பலன்கள் கிடைக்காது. 

பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கூட்டுத் தொழில் முயற்சிகள் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் உங்களுக்கு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel