தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கஷ்டத்தில் சிக்கிய ராசிகள்.. ஆபத்தை தரப்போகும் சுக்கிர பெயர்ச்சி.. சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்

கஷ்டத்தில் சிக்கிய ராசிகள்.. ஆபத்தை தரப்போகும் சுக்கிர பெயர்ச்சி.. சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 17, 2024 02:38 PM IST

Venus: சுக்கிரனின் இடமாற்றம் சில ராசிகளுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை உருவாக்கி வருகிறது மீன ராசியில் நுழைந்த சுக்கிரனால். பண சிக்கல்களை சந்திக்க போகும் ராசிகள் குறித்து இங்கே காணலாம்.

சுக்கிரன்
சுக்கிரன்

30 நாட்களுக்குள் தனது இடத்தை மாற்றக் கூடியவர் சுக்கிரன். கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவானின் மீன ராசியில் பின் நுழைந்தார். ஏற்கனவே இந்த ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார்.

சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும் சுக்கிரனின் இடமாற்றம் சில ராசிகளுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை உருவாக்கி வருகிறது மீன ராசியில் நுழைந்த சுக்கிரனால். பண சிக்கல்களை சந்திக்க போகும் ராசிகள் குறித்து இங்கே காணலாம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

நெருக்கமான ஒருவரால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது சண்டைகள் ஏற்படும். எனவே எடுத்த காரியங்கள் நடப்பதற்கு சற்று தாமதமாகும் கவனமாக இருப்பது நல்லது.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சுக்கிரன் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களால் அவமானம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எடுத்த காரியங்கள் வெற்றி அடைவதற்கு சற்று தாமதமாகும் தேவையில்லாத சிக்கல்கள் உங்களை தேடி வரும். 

வீண்பழி உங்கள் மீது சுமத்தப்படும். இந்த காலகட்டத்தில் எந்த சிக்கல்கள் வந்தாலும் அதிலிருந்து நீங்கள் விலகி இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை மிகவும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் வேலையை காட்டப் போகின்றார். இதனால் உங்களுக்கு குடும்பம் மற்றும் தொழில் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். உறவினர்களால் நீங்கள் பல்வேறு விதமான சங்கடங்களை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்களால் சிக்கல்கள் உண்டாக்கும். 

குடும்ப உறுப்பினர்களிடம் நேரத்தை செலவிட்டால் சற்று மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால் நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. தேவையில்லாத இடத்தில் வாயை திறந்து மாட்டிக்கொள்ள வேண்டும். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel