தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Surya: கண்ணீர் விட வைக்கும் சூரியன்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. கதற கதற சிதறும் ராசிகள் நீங்கதான்

Lord Surya: கண்ணீர் விட வைக்கும் சூரியன்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. கதற கதற சிதறும் ராசிகள் நீங்கதான்

Suriyakumar Jayabalan HT Tamil
May 29, 2024 03:07 PM IST

Lord Surya: சுக்கிரன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அது சிக்கலாக அமைந்துள்ளது.

கண்ணீர் விட வைக்கும் சூரியன்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. கதற கதற சிதறும் ராசிகள் நீங்கதான்
கண்ணீர் விட வைக்கும் சூரியன்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. கதற கதற சிதறும் ராசிகள் நீங்கதான்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் சூரியன் மே மாதம் 14ஆம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார்.

இது சுக்கிர பகவானின் ராசி ஆகும். சுக்கிரன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அது சிக்கலாக அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் சூரிய பகவான் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஜூன் மாதம் பாதி வரை உங்களுக்கு இந்த சிக்கல்கள் அனைத்தும் தொடரும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சற்று தாமதம் ஆகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நிதிநிலைமை விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை சேமிக்க முடியாது. நிதி ரீதியாக நீங்கள் இந்த முறை மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் 12வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். திட்டமிட்டு செலவுகள் செய்வதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பணம் கஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிர்பாராத நேரத்தில் செலவுகள் அதிகரிக்கக்கூடும். செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். ஏனென்றால் பண விரயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் சிக்ககூடும். புது முடிவுகள் எடுக்கும். போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக நீங்கள் புதிய முதலீடுகள் செய்வதை தற்போது தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை புதிய முதலீடுகளை தட்டிக் கழிப்பது நல்லது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு கடன் கொடுக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel