தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs That Will Be Afflicted By Lord Rahu This Year

முரட்டடி கொடுக்கப் போகும் ராகு.. 3 ராசிகளுக்கு எச்சரிக்கை

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 23, 2024 03:55 PM IST

Lord Rahu: ராகு பகவானால் இந்த ஆண்டு கஷ்டப்படப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

ராகு பகவான்
ராகு பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்கின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.

வரும் 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் கும்ப ராசிக்கு தனது இடத்தை மாற்றுகிறார். இது சில ராசிகளுக்கு நன்மைகளாக இருந்தாலும் சில ராசிகள் சிரமமான சூழ்நிலையை அனுபவிக்க போகின்றனர். அந்த வகையில் ராகு பகவானால் சிரமப்பட போகும் காட்சிகளை இங்கே காண்போம்

கன்னி ராசி

 

இந்த ஆண்டு ராகு பகவான் தாக்கத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அவர் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இருப்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்தமாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் பல்வேறு விதமான வாக்குவாதங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் ராகு பகவான் பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வீடு மற்றும் வசதிகளில் சற்று மந்தமான சூழ்நிலை உண்டாகும். ராகு பகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார். அதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எந்த காரியத்திலும் அலட்சியமாக இருப்பதை தவிர்ப்பது நல்லது. மிக நிலைமையில் பெரிய முன்னேற்றம் இருக்காது குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

கும்ப ராசி

 

இந்த ஆண்டு உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ராகு பகவான் கொடுப்பார். செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்கள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel