தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs That Started Auspicious Time With Guru Bhagavan

Guru Luck: குருவின் மாற்றம்.. இந்த ராசிகளுக்கு யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 10, 2024 11:34 AM IST

குரு பகவானால் நல்ல காலம் தொடங்கிய ராசிகளை இங்கே காண்போம்.

குரு பகவான்
குரு பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் குரு நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். உலக இன்பத்தின் காரணியாக விளங்கக்கூடிய குருபகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். குரு பகவானின் பார்வை பட்டால் அந்த ராசிக்கு வளர்ச்சியை தடுக்க முடியாது என கூறப்படுகிறது.

இந்த புத்தாண்டு முதல் குரு பகவான் நேரான பயணத்தை தொடங்கியுள்ள காரணத்தினால் சில ராசிகளுக்கு முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

குரு பகவான் இந்த புத்தாண்டில் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். பழைய நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பணவரவில் இருந்து குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் .பொருளாதாரத்தில் இருந்து சிக்கல்கள் குறையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி

 

குருபகவான் நேரான பயணத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. இந்த புத்தாண்டில் இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். எதிர்பார்த்து காத்து இருந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். முக்கிய நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மேஷ ராசி

 

குரு பகவானின் நேரான பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மற்றவர்களிடத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வருகின்றது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆளுமை திறன் அதிகரிக்கும். சிறப்பான விஷயங்களுக்கு உங்களுடைய நேரம் செலவாகும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.