Sani Peyarchi: 2025 வரை சக்கையாக பிழிய போகும் சனி.. கோர தாண்டவத்தில் முரட்டு அடி வாங்கும் 3 ராசிகள்.. சிக்கியது யார்?
Lord Sani: 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. இந்நிலையில் சனி பகவானால் 2025 வரை சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Sani Peyarchi: கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் இரண்டு அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.
சனிபகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள்.
இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. இந்நிலையில் சனி பகவானால் 2025 வரை சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மகர ராசி
வரும் 2025 வரை நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிர்களால் உங்களுக்கு சங்கடங்கள் மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது குடும்பத்தினரிடம் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும்.
வேலை மற்றும் தொழிலில் பெரிய முன்னேற்றம் இருக்காது. எடுத்துக் கொண்ட காரியங்களில் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைவாக உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கு தாமதமாகலாம். காதல் வாழ்க்கையில் சண்டைகள் ஏற்படக்கூடும் எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கும்ப ராசி
உங்கள் ராசியில் தான் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார் இருப்பினும் 2025 ஆம் ஆண்டு தொடங்கும். வரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் தொடங்குவதற்கான காலமாக இது இருக்காது. தொழிலில் மந்தமான சூழ்நிலை இருக்கும். புதிய வேலை கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை உங்களுக்கு தொடர்ந்து கொண்டே இருக்கும். புதிய பிரச்சனைகள் உங்கள் தொழிலில் வந்து கொண்டே இருக்கும்.
வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்குவார்கள். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கணவன் மனைவி இடையே சண்டை மற்றும் மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மீன ராசி
உங்கள் ராசியில் 2025 தொடங்குவதற்கு முன்பு வரை சனிபகவான் பிரித்து மேயப் போகிறார். திருமண வாழ்க்கை உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் கவலைகள் ஏற்படக்கூடும். வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கடன் சிக்கல்களால் மன உளைச்சல்கள் ஏற்படும். புதிதாக கடன் வாங்க கூடியவர்கள் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பின்வரும் காலங்களில் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பல்வேறு விதமான சிக்கல்களால் உங்களுக்கு மன அமைதி கெடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9