தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs That Saturn And Mars Together Are Going To Trouble

சனியோடு விளையாடும் செவ்வாய்.. புரட்டி எடுப்பது உறுதி.. கூட்டணி சேர்ந்து விட்டனர்.. அடி வாங்க போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 14, 2024 01:58 PM IST

Saturn and Mars: தளபதியாக திகழ்ந்துவரும் செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வலிமை, துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று அதாவது நாளை தனது இடத்தை மாற்றுகிறார்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இவர் தற்போது கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் சேனாதிபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். தளபதியாக திகழ்ந்துவரும் செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வலிமை, துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று அதாவது நாளை தனது இடத்தை மாற்றுகிறார்.

கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவானோடு செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி இணைகின்றனர். இவர்களுடைய சேர்க்கையானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடக்கின்றது. சில ராசிகளுக்கு நன்மைகள் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அசுப பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

விருச்சிக ராசி

 

சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத செலவுகள் ஏற்படக்கூடும். பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வீண் அலைச்சல்கள் மற்றும் செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க சற்று தாமதமாகும். புதிய தொழில் தொடங்கக் கூடியவர்கள் தற்போது தள்ளி வைப்பது நல்லது. நல்ல விஷயங்களில் ஈடுபடுவது சற்று தாமதமாகும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

கடக ராசி

 

செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை உங்களுக்கு செலவுகளை அதிகப்படுத்த போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதை எடுத்தாலும் நஷ்டம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. புதிய செயலில் ஈடுபட விரும்பினால் மிகவும் ஆலோசனை செய்து யோசித்து இறங்குவது நல்லது. சனியின் தாக்கமானது சற்று அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பனிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மீன ராசி

 

உங்களுடைய ராசிகள் விரய ஸ்தானத்தில் சனி மற்றும் செவ்வாயின் இணைப்பானது நடக்கின்றது. உங்களின் ஆளுமை திறன் நிரூபிக்க சற்று தாமதமாகும். உங்கள் மீது பல்வேறு விதமான சிக்கல்கள் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய செயல்களில் ஈடுபடும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கடன் வாங்குவது தவிர்ப்பது நல்லது. வியாபாரம் மற்றும் தொழிலில் சில தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel