பிறப்பிலேயே கோடீஸ்வரர்.. அதிர்ஷ்டத்தில் பிறந்த ராசிகள்.. இதில் உங்கள் ராசி இருக்கா.. பார்க்கலாம் வாங்க
Millionaire Horoscopes: சில ராசிக்காரர்கள் பிறப்பிலேயே பணம் மட்டும் அதிர்ஷ்ட யோகத்தை கொண்டிருப்பார்கள். அந்த வகையில் இயற்கையாகவே பணம் சம்பாதிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
பல நூற்றாண்டுகளாக நமது மக்கள் ஜோதிட சாஸ்திரத்தை நம்பி அனைத்து காரியங்களையும் செய்து வருகின்றனர். எதிர்காலத்தை தெரிந்து கொள்வதற்காக ஜோதிட சாஸ்திரத்தை அனைவரும் நம்பி அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்கிறார்கள். தமது வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்து செயல்பாடுகளையும் ஜோதிட சாஸ்திரம் மூலம் கனித்து அதற்கு ஏற்றார் போல் பலரும் தங்களது செயல்பாடுகளை செய்து வருகின்றனர்.
நவக்கிரகங்கள் இடமாற்றத்தை பொறுத்து ஒருவரின் செயல் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் நட்சத்திரங்கள் சரியாக இணையும் பொழுது நன்மைகள் நடக்கின்றன. அதனுடைய பாதையை பொறுத்து நன்மை மற்றும் தீமைகள் முடிவு செய்யப்படுகின்றன.
அந்த வகையில் சில ராசிக்காரர்கள் பிறப்பிலேயே பணம் மட்டும் அதிர்ஷ்ட யோகத்தை கொண்டிருப்பார்கள். அந்த வகையில் இயற்கையாகவே பணம் சம்பாதிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
மேஷ ராசி
உங்களுக்கு தைரியம் மற்றும் லட்சியம் இயற்கையாகவே அமைந்துள்ளது. பெரும்பாலும் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் முன்னேற்றத்தை காண்பீர்கள். நீங்கள் செவ்வாய் கிரகத்தின் ராசியாக விளங்கி வருகின்ற காரணத்தினால் அச்சமற்ற நிலையில் அனைத்து செயல்களிலும் ஈடுபடுவீர்கள். அதிக உள்ளார்ந்த உணர்வை கொண்டு இருக்கின்ற காரணத்தினால் தனது இலக்கை நோக்கி எப்போதும் துவண்டு விடாமல் பயணம் செய்யக்கூடியவர்கள். உங்களுடைய தலைமைத்துவ குணமானது புதிய வாய்ப்புகளை உருவாக்கி லாபத்தை அதிகப்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிகம் முன்னேற்றம் கிடைக்கக்கூடிய சூழ்நிலை அமையும்.
ரிஷப ராசி
சுக்கிர பகவான் ஆளப்படும் ராசியாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். தனக்கென எப்போதும் தனி இடத்தை உருவாக்கக் கூடியவர்களின் நீங்கள் அசைக்க முடியாத உறுதிபாட்டில் இருக்கின்ற காரணத்தினால் நீங்கள் செல்வத்தை பாதுகாப்பதில் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நிதியை அடிப்படையாகக் கொண்டு மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க கூடியவர்கள். கூர்மையான அறிவால் புதிய முதலீடுகளை இரட்டிப்பாக மாற்றக்கூடிய திறன் கொண்டவர்கள். செல்வ வளங்களோடு எப்போதும் இருக்க கூடிய ராசிக்காரர்கள் ஆக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். எதிர்காலத்தை நோக்கி குறிக்கோளோடு பயணிக்க கூடிய ராசிகளாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள்.
சிம்ம ராசி
எல்லையற்ற ஆற்றல் மூலம் விளங்கக் கூடியவர்கள் நீங்கள் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட சூரிய பகவானால் ஆளப்படும் ராசியாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். எப்போதும் நம்பிக்கை மற்றும் லட்சியத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். இயற்கையாகவே வணிகத்தின் நீங்கள் தலைவராக இருக்கக் கூடிய சூழ்நிலை அமையும். எந்த பதவிகளில் இருந்தாலும் அதில் உச்சத்தில் அமர்ந்து இருக்கக்கூடிய திறன் உங்களுக்கு எப்போதுமே உண்டு. எந்த தொழில் தொடங்கினாலும் அதனை உச்சத்திற்கு கொண்டு செல்லும் கூர்மையான அறிவு உங்களுக்கு உண்டு. எடுத்த காரியத்தை முடிக்கும் வரை அயராது உழைக்கும் ராசிக்காரர்களாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். ஓயாது உழைப்பதில் சூரியன் எப்படி வல்லவரோ அது போல உங்களுக்கும் ஓயாத உழைப்பதில் அதிக ஈடுபாடு இருக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9